பாடசாலை விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணங்கள் செல்லும் போது அவதானமாக செயற்படுமாறு இலங்கை பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளது.
பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
வாகனம் ஓட்டும்போதும், வெவ்வேறு இடங்களில் குளிப்பதற்கு செல்லும் போதும் கவனமாக இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, சுற்றுலா தளங்களில் சிறிய பிள்ளைகள் குளிக்கும் போது ஆபத்தான இடங்களை தெரிவு செய்வதை தவிர்க்குமாறும் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் 22 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், கல்வி அமைச்சு விடுமுறை வழங்கியுள்ளது.
இதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளுக்கு நீண்ட விடுமுறை: சுற்றுலா செல்வோருக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை பாடசாலை விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணங்கள் செல்லும் போது அவதானமாக செயற்படுமாறு இலங்கை பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளது.பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.வாகனம் ஓட்டும்போதும், வெவ்வேறு இடங்களில் குளிப்பதற்கு செல்லும் போதும் கவனமாக இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இதேவேளை, சுற்றுலா தளங்களில் சிறிய பிள்ளைகள் குளிக்கும் போது ஆபத்தான இடங்களை தெரிவு செய்வதை தவிர்க்குமாறும் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த நிலையில், பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் 22 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், கல்வி அமைச்சு விடுமுறை வழங்கியுள்ளது.இதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.