சமூக நலத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடல் நேற்று (01) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் அரிசி விலையை ஸ்திரப்படுத்தல், அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்டகால தீர்வு காணல் மற்றும் நெல் சேமிப்பு முறையை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கியத்துவம் என்பன வலியுறுத்தப்பட்டுள்ளன.
மேலும், எதிர்வரும் பாடசாலை பருவத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான நிவாரண விநியோகத் திட்டத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கான திட்டங்கள் மற்றும் விவசாயத்துக்கான உர விநியோகம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்டகால தீர்வு; டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் ஜனாதிபதியின் திட்டம் சமூக நலத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது. இக் கலந்துரையாடல் நேற்று (01) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.இந்தக் கலந்துரையாடலில் அரிசி விலையை ஸ்திரப்படுத்தல், அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்டகால தீர்வு காணல் மற்றும் நெல் சேமிப்பு முறையை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கியத்துவம் என்பன வலியுறுத்தப்பட்டுள்ளன.மேலும், எதிர்வரும் பாடசாலை பருவத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான நிவாரண விநியோகத் திட்டத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கான திட்டங்கள் மற்றும் விவசாயத்துக்கான உர விநியோகம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.