• Jan 26 2025

வேகக்கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளான லொறி

Chithra / Jan 21st 2025, 12:24 pm
image

நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த லொறி ஒன்று, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்ல குறுக்கு வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து நேற்று இரவு  இடம்பெற்றுள்ளது.

வீதியில் அதிவேகமாகச் சென்ற லொறியில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வேககட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதிக்கு அருகில் உள்ள மண்மேட்டில் மோதி விபத்து ஏற்பட்டதாகக் நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்

விபத்தினால் லொறியில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

லொறி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.


வேகக்கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளான லொறி நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த லொறி ஒன்று, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்ல குறுக்கு வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்து நேற்று இரவு  இடம்பெற்றுள்ளது.வீதியில் அதிவேகமாகச் சென்ற லொறியில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வேககட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதிக்கு அருகில் உள்ள மண்மேட்டில் மோதி விபத்து ஏற்பட்டதாகக் நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்விபத்தினால் லொறியில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.லொறி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement