• Jul 03 2024

தாமரை மொட்டில் தனி வேட்பாளர் நிச்சயம்..! திஸ்ஸகுட்டியாராச்சி அறிவிப்பு

Chithra / Jul 1st 2024, 8:53 am
image

Advertisement

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தனி வேட்பாளர் நிச்சயமாக முன்வைக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி தெரிவித்தார்.

அப்போது இருந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டு வந்ததாக கூறிய திஸ்ஸ குட்டியாராச்சி, 

ரணில் விக்கிரமசிங்க இல்லாமல் ரோஹித அபேகுணவர்தன இருந்தாலும் அந்த பணியை காஞ்சன, ஷெஹான் சரியாக செய்வார் என்றும் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அகலவத்தை தொகுதி மாநாட்டில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

வரிசையை நிறுத்தியவர்களோ, இரண்டு ஐம்பதுக்கு உணவு கொடுத்தவர்களோ, பால் மா பாக்கெட்டின் விலையைக் குறைத்தோ, ஒருவரைக் கொன்றோ தலைவர்களை நியமிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாமலை அழைத்து வர முற்படும் போது, ​​அவர் இன்னும் இளம் காயாக இருப்பதாக கூறுகின்றனர். 

அவர் எங்கே இளம் காயாக இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை, என்று திஸ்ஸ குட்டியாராச்சி கூறினார்.

அநுரகுமாரவிடம் பொருளாதாரக் கொள்கை இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தாமரை மொட்டில் தனி வேட்பாளர் நிச்சயம். திஸ்ஸகுட்டியாராச்சி அறிவிப்பு  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தனி வேட்பாளர் நிச்சயமாக முன்வைக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி தெரிவித்தார்.அப்போது இருந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டு வந்ததாக கூறிய திஸ்ஸ குட்டியாராச்சி, ரணில் விக்கிரமசிங்க இல்லாமல் ரோஹித அபேகுணவர்தன இருந்தாலும் அந்த பணியை காஞ்சன, ஷெஹான் சரியாக செய்வார் என்றும் தெரிவித்தார்.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அகலவத்தை தொகுதி மாநாட்டில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.வரிசையை நிறுத்தியவர்களோ, இரண்டு ஐம்பதுக்கு உணவு கொடுத்தவர்களோ, பால் மா பாக்கெட்டின் விலையைக் குறைத்தோ, ஒருவரைக் கொன்றோ தலைவர்களை நியமிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நாமலை அழைத்து வர முற்படும் போது, ​​அவர் இன்னும் இளம் காயாக இருப்பதாக கூறுகின்றனர். அவர் எங்கே இளம் காயாக இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை, என்று திஸ்ஸ குட்டியாராச்சி கூறினார்.அநுரகுமாரவிடம் பொருளாதாரக் கொள்கை இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement