• Nov 23 2024

இன்று சிவப்பு நிறத்தில் ஒளிர தயாராகும் கொழும்பு தாமரை கோபுரம்!

Chithra / Sep 1st 2024, 12:16 pm
image

 

உலக அல்சைமர் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கொழும்பு தாமரை கோபுரம் இன்று முதலாம் திகதி சிவப்பு நிறத்தில் ஒளிரும் என அதன் முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிமென்ஷியா நோயாகக் கருதப்படும் அல்சைமர் நோயின் மீது உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செப்டம்பர் மாதத்தை அல்சைமர் மாதமாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்துள்ளது.

அல்சைமர் நோய் அறிகுறிகள் தொடர்பில் கவனம் செலுத்த உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி நோய் மிகவும் தீவிரமடையும் முன் அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

டிமென்ஷியா நோயானது நினைவாற்றல், சிந்தனை மற்றும் நடத்தை ஆகியவற்றை பாதிக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று சிவப்பு நிறத்தில் ஒளிர தயாராகும் கொழும்பு தாமரை கோபுரம்  உலக அல்சைமர் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கொழும்பு தாமரை கோபுரம் இன்று முதலாம் திகதி சிவப்பு நிறத்தில் ஒளிரும் என அதன் முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.டிமென்ஷியா நோயாகக் கருதப்படும் அல்சைமர் நோயின் மீது உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செப்டம்பர் மாதத்தை அல்சைமர் மாதமாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்துள்ளது.அல்சைமர் நோய் அறிகுறிகள் தொடர்பில் கவனம் செலுத்த உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி நோய் மிகவும் தீவிரமடையும் முன் அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.டிமென்ஷியா நோயானது நினைவாற்றல், சிந்தனை மற்றும் நடத்தை ஆகியவற்றை பாதிக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement