இலங்கைக்கு வடகிழக்கே கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் அதே பகுதியில் செயற்பட்டு வருவதால், நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
வடகிழக்கில் நிலைகொண்ட தாழ்வு மண்டலம் – தீவிர மழைக்கு வாய்ப்பு இலங்கைக்கு வடகிழக்கே கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் அதே பகுதியில் செயற்பட்டு வருவதால், நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.