• May 18 2024

தென்மேற்கு வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி : கனமழை எச்சரிக்கை! samugammedia

Tamil nila / Dec 2nd 2023, 6:37 pm
image

Advertisement

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. 

இது திருகோணமலையில் இருந்து வடகிழக்கில் சுமார் 321 கி.மீ. நிலைகொண்டுள்ளது.

இது நாளை சூறாவளி புயலாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கு வடமேற்கு நோக்கி இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் இந்தியாவின் வட தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நாளை மறுதினம் நகரும். 

அதன்பிறகு, அது ஒரு சூறாவளி புயலாக வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திரப் பிரதேச கடற்கரை டிசெம்பர் 5ஆம் திகதி கடக்கும்.

தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். தீவின் ஏனைய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும். வடக்கு, வடமத்திய, பகுதிகளில் அவ்வப்போது (40-50) கிலோ மீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.


தென்மேற்கு வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி : கனமழை எச்சரிக்கை samugammedia தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது திருகோணமலையில் இருந்து வடகிழக்கில் சுமார் 321 கி.மீ. நிலைகொண்டுள்ளது.இது நாளை சூறாவளி புயலாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கு வடமேற்கு நோக்கி இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் இந்தியாவின் வட தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நாளை மறுதினம் நகரும். அதன்பிறகு, அது ஒரு சூறாவளி புயலாக வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திரப் பிரதேச கடற்கரை டிசெம்பர் 5ஆம் திகதி கடக்கும்.தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். தீவின் ஏனைய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும். வடக்கு, வடமத்திய, பகுதிகளில் அவ்வப்போது (40-50) கிலோ மீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.

Advertisement

Advertisement

Advertisement