• Sep 19 2024

லெப்.கேணல் சந்திரன் பூங்காவினை கையகப்படுத்திய இராணுவம்- தமிழ் மக்களின் நெஞ்சங்களை பிளந்த விடயம்.! samugammedia

Sharmi / Apr 24th 2023, 12:09 pm
image

Advertisement

லெப்.கேணல் சந்திரன் என்று அழைக்கப்படுகின்ற அரசியல்துறையின் முன்னாள் போராளி ஒருவரின் நினைவாக உருவாக்கப்பட்ட சந்திரன் பூங்காவினை கையகப்படுத்தும் நோக்கில் இராணுவத்தின் காணி அளவீடு செய்து வருவதாக கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வேழமாலிகிதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிளிநொச்சி நகர மையத்தில் அமைந்துள்ள டிப்போ சாந்தி சந்திரன் பூங்காவிற்கு  சொந்தமான காணி இராணுவத்தினர் இன்று அளவீடு செய்த நிலையில் மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

சம்பவ இடத்தில் ஊடகங்களுக்கு இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

கரைச்சி பிரதேச செயலாளரின் அனுமதி இன்றியே இந்த காணி அளவீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆனால் இராணுவத்தினரிடம் வினவியபோது 51ஆவது படைப்பிரிவின் கட்டளைப்படியே தாம் இதனை அளவீடு செய்வதாக தெரிவிப்பதாக வேழமாலிகிதன் குறிப்பிட்டுள்ளார்.

காணி சுவீகரிப்பு காரணமாக கிளிநொச்சி நகரின் நிர்மாணப்பணிகள் தடைப்பட்டுள்ளதாக வேழமாலிகிதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த இடத்தில் நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்ககூடிய வகையிலும் தமிழ் மக்களின் நெஞ்சங்களை பிளப்பது போன்ற வெற்றி சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் வேழமாலிகிதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

லெப்.கேணல் சந்திரன் பூங்காவினை கையகப்படுத்திய இராணுவம்- தமிழ் மக்களின் நெஞ்சங்களை பிளந்த விடயம். samugammedia லெப்.கேணல் சந்திரன் என்று அழைக்கப்படுகின்ற அரசியல்துறையின் முன்னாள் போராளி ஒருவரின் நினைவாக உருவாக்கப்பட்ட சந்திரன் பூங்காவினை கையகப்படுத்தும் நோக்கில் இராணுவத்தின் காணி அளவீடு செய்து வருவதாக கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வேழமாலிகிதன் குற்றம் சுமத்தியுள்ளார்.கிளிநொச்சி நகர மையத்தில் அமைந்துள்ள டிப்போ சாந்தி சந்திரன் பூங்காவிற்கு  சொந்தமான காணி இராணுவத்தினர் இன்று அளவீடு செய்த நிலையில் மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.சம்பவ இடத்தில் ஊடகங்களுக்கு இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.கரைச்சி பிரதேச செயலாளரின் அனுமதி இன்றியே இந்த காணி அளவீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.ஆனால் இராணுவத்தினரிடம் வினவியபோது 51ஆவது படைப்பிரிவின் கட்டளைப்படியே தாம் இதனை அளவீடு செய்வதாக தெரிவிப்பதாக வேழமாலிகிதன் குறிப்பிட்டுள்ளார்.காணி சுவீகரிப்பு காரணமாக கிளிநொச்சி நகரின் நிர்மாணப்பணிகள் தடைப்பட்டுள்ளதாக வேழமாலிகிதன் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்த இடத்தில் நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்ககூடிய வகையிலும் தமிழ் மக்களின் நெஞ்சங்களை பிளப்பது போன்ற வெற்றி சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் வேழமாலிகிதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement