• Mar 17 2026

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து; பலர் காயம்! அதிகாலையில் சம்பவம்

Chithra / Oct 22nd 2025, 8:14 am
image

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து மதவாச்சி பிரதான வீதியில், ஆண்டியா புளியங்குளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த விபத்து இன்று புதன்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து; பலர் காயம் அதிகாலையில் சம்பவம் கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து மதவாச்சி பிரதான வீதியில், ஆண்டியா புளியங்குளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து இன்று புதன்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement