• Mar 15 2026

வீதியிலிருந்த பள்ளத்தில் கவிழந்த சொகுசு கார்; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஐவர்!

shanu / Sep 22nd 2025, 10:04 pm
image

வீதியிலிருந்த பள்ளத்தில் சொகுசு கார் ஒன்று கவிழந்துள்ளதில் அதில் பயணித்த ஐவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 


இந்த விபத்துச் சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலத்தின்  பாட்னாவில் கடந்த வெள்ளிக்கிழமை  இடம்பெற்றுள்ளது. 


குறித்த பகுதியில் ஐந்து பேருடன்  பயணித்துக் கொண்டிருந்த சொகுசு கார், குளம் போல் வீதியில்  தேங்கியிருந்த  பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியது. 


எனினும்  காரில் பயணித்த ஐந்து பேரும் எவ்வித காயமின்றி உயிர் தப்பினர். விபத்தையடுத்து காரை செலுத்திய  பெண் தெரிவிக்கையில்,


 "நாங்கள் எல்லோரையும் தொடர்பு கொண்டோம். டிம் உடன் பேசினோம். அவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரசை அவமதிப்பதற்காக சதி செய்யப்பட்டது தான் இந்த பள்ளம் எனக் கூறினார்" எனத் தெரிவித்தார்.


 மேலும், அதிகாரிகள் குழியை தோண்டி, 20 நாட்களாக கவனிக்காமல் விட்டுவிட்டனர். தற்போது மழைக்காலம். ஐந்து பேர் காரில் இருந்தோம். யாராவது ஒருவர் உயிரிழந்திருந்தால், யார் பொறுப்பு?. எங்கள் கார் விழுந்த அதேநேரத்தில், பைக் ஒன்றும் விழுந்தது. 


ஒவ்வொரு நாளும் இந்த குழியில் தினமும் யாராவது ஒருவர் விழுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார். 


வீதியில் காணப்படும் குறித்த பள்ளத்தில் தினமும் விபத்துக்கள் பதிவாகி வருகின்றதாக பொதுமக்கள்  குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

வீதியிலிருந்த பள்ளத்தில் கவிழந்த சொகுசு கார்; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஐவர் வீதியிலிருந்த பள்ளத்தில் சொகுசு கார் ஒன்று கவிழந்துள்ளதில் அதில் பயணித்த ஐவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த விபத்துச் சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலத்தின்  பாட்னாவில் கடந்த வெள்ளிக்கிழமை  இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் ஐந்து பேருடன்  பயணித்துக் கொண்டிருந்த சொகுசு கார், குளம் போல் வீதியில்  தேங்கியிருந்த  பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியது. எனினும்  காரில் பயணித்த ஐந்து பேரும் எவ்வித காயமின்றி உயிர் தப்பினர். விபத்தையடுத்து காரை செலுத்திய  பெண் தெரிவிக்கையில், "நாங்கள் எல்லோரையும் தொடர்பு கொண்டோம். டிம் உடன் பேசினோம். அவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரசை அவமதிப்பதற்காக சதி செய்யப்பட்டது தான் இந்த பள்ளம் எனக் கூறினார்" எனத் தெரிவித்தார். மேலும், அதிகாரிகள் குழியை தோண்டி, 20 நாட்களாக கவனிக்காமல் விட்டுவிட்டனர். தற்போது மழைக்காலம். ஐந்து பேர் காரில் இருந்தோம். யாராவது ஒருவர் உயிரிழந்திருந்தால், யார் பொறுப்பு. எங்கள் கார் விழுந்த அதேநேரத்தில், பைக் ஒன்றும் விழுந்தது. ஒவ்வொரு நாளும் இந்த குழியில் தினமும் யாராவது ஒருவர் விழுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார். வீதியில் காணப்படும் குறித்த பள்ளத்தில் தினமும் விபத்துக்கள் பதிவாகி வருகின்றதாக பொதுமக்கள்  குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement