• Mar 10 2026

மஹாபொல புலமைப்பரிசில் 2,500 ரூபாவால் அதிகரிப்பு!

shanu / Nov 7th 2025, 8:21 pm
image

விஷ போதைப்பொருளை ஒழிப்பதற்கான சுற்றிவளைப்புகளுக்கு 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 


அதேநேரம், பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 2,500 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என அறிவித்தார். 


தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிலும் ஆசிரிய மாணவர்களுக்கான கொடுப்பனவு 2,500 ரூபாயினால் அதிகரிக்கப்படும். 


விசேட தேவையுடைய பிள்ளைகள் உயர் கல்வியை பெறுவதற்காக 5,000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 


நாடளாவிய ரீதியில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு 8,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மஹாபொல புலமைப்பரிசில் 2,500 ரூபாவால் அதிகரிப்பு விஷ போதைப்பொருளை ஒழிப்பதற்கான சுற்றிவளைப்புகளுக்கு 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதேநேரம், பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 2,500 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என அறிவித்தார். தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிலும் ஆசிரிய மாணவர்களுக்கான கொடுப்பனவு 2,500 ரூபாயினால் அதிகரிக்கப்படும். விசேட தேவையுடைய பிள்ளைகள் உயர் கல்வியை பெறுவதற்காக 5,000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நாடளாவிய ரீதியில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு 8,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement