• Oct 03 2024

விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைப்பு - தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மஹிந்த விடுத்த கோரிக்கை!

Chithra / Oct 3rd 2024, 10:26 am
image

Advertisement


தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட உர மானியத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட உர மானியத்தை வழங்குமாறு முன்னாள் விவசாய அமைச்சர்  தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இதுதொடர்பாக கடிதமொன்றை கையளித்துள்ளார்.

இதனையடுத்து கருத்து வெளியிட்ட அவர்,

உர மானியத்தை மக்களுக்கு வழங்கியமைக்காக தற்போதைய ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும்,

ஆனால், விவசாயிகளுக்கு முப்பதாயிரம் ரூபாய் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தேர்தல்கள் ஆணைக்குழு இந்த உர மானியம் வழங்குவதை இடை நிறுத்தியமையால் விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டிற்கு புரதச்சத்து வழங்கும் மீனவர்களுக்கும் எரிபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைப்பு - தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மஹிந்த விடுத்த கோரிக்கை தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட உர மானியத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட உர மானியத்தை வழங்குமாறு முன்னாள் விவசாய அமைச்சர்  தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இதுதொடர்பாக கடிதமொன்றை கையளித்துள்ளார்.இதனையடுத்து கருத்து வெளியிட்ட அவர்,உர மானியத்தை மக்களுக்கு வழங்கியமைக்காக தற்போதைய ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும்,ஆனால், விவசாயிகளுக்கு முப்பதாயிரம் ரூபாய் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.தேர்தல்கள் ஆணைக்குழு இந்த உர மானியம் வழங்குவதை இடை நிறுத்தியமையால் விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.நாட்டிற்கு புரதச்சத்து வழங்கும் மீனவர்களுக்கும் எரிபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement