• Nov 19 2024

ரணில் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்தது- சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டு..!

Sharmi / Aug 2nd 2024, 9:28 am
image

கடந்த 2022 ஆம் ஆண்ட நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையின் போது இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்ய மஹிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்தது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம்(01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கோரி மஹிந்த ராஜபக்ஷவை நான் சந்தித்ததாக ராஜபக்ஷர்களின் உறவினர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் நபர் தெரிவித்துள்ளமை முற்றிலும் பொய்யானது.மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் தரப்பினர்கள் கடந்த காலங்களில் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நெருக்கடியான சூழ்நிலையின் போது நாட்டுக்காக சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.2022 ஆம் ஆண்டு இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்வதற்கு அவர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க போவதில்லை என்று பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.பொதுஜன பெரமுனவின் நலன் விரும்பிகள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து அரசியல் கற்றுக்கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு நாட்டு மக்களை பாதுகாத்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது கட்சியின் கொள்கைக்கு எதிரானதொரு தீர்மானமல்ல,கட்சிக்கு முன்னுரிமை வழங்குவதை விட நாட்டுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

பரந்துபட்ட அரசியல் கூட்டணியின் சுயாதீன வேட்பாளராகவே ரணில் விக்கிரமசிங்க போட்டியிடவுள்ளார்.பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் ஜனாதிபதி வசமாகி விட்டது.2022 ஆம் ஆண்டின் சமூக கட்டமைப்பின் நிலைவரத்துக்கும்,தற்போதைய நிலைவரத்துக்கும் இடையில் பாரிய மாற்றம் காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

ரணில் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்தது- சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டு. கடந்த 2022 ஆம் ஆண்ட நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையின் போது இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்ய மஹிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்தது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றையதினம்(01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கோரி மஹிந்த ராஜபக்ஷவை நான் சந்தித்ததாக ராஜபக்ஷர்களின் உறவினர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் நபர் தெரிவித்துள்ளமை முற்றிலும் பொய்யானது.மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் தரப்பினர்கள் கடந்த காலங்களில் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நெருக்கடியான சூழ்நிலையின் போது நாட்டுக்காக சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.2022 ஆம் ஆண்டு இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்வதற்கு அவர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க போவதில்லை என்று பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.பொதுஜன பெரமுனவின் நலன் விரும்பிகள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து அரசியல் கற்றுக்கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு நாட்டு மக்களை பாதுகாத்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது கட்சியின் கொள்கைக்கு எதிரானதொரு தீர்மானமல்ல,கட்சிக்கு முன்னுரிமை வழங்குவதை விட நாட்டுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.பரந்துபட்ட அரசியல் கூட்டணியின் சுயாதீன வேட்பாளராகவே ரணில் விக்கிரமசிங்க போட்டியிடவுள்ளார்.பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் ஜனாதிபதி வசமாகி விட்டது.2022 ஆம் ஆண்டின் சமூக கட்டமைப்பின் நிலைவரத்துக்கும்,தற்போதைய நிலைவரத்துக்கும் இடையில் பாரிய மாற்றம் காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement