• May 22 2024

பொலிஸ் நிலையத்தில் அட்டகாசம் செய்த மஹிந்தவின் மைத்துனர்..! நடந்தது என்ன?

Chithra / Jan 3rd 2024, 12:36 pm
image

Advertisement


கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மைத்துனர் தனது இரு மகன்களை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாதுகாப்பு சோதனைக்குட்படுத்தியதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்திற்கு சென்று அட்டகாசம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடிபோதையில் இருந்த ஒரு குழுவுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற குறித்த சந்தேகநபர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை அச்சுறுத்தியுள்ளார்.

பின்னர் விசாரணையை மேற்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிளிடம் இரண்டு பிள்ளைகளிடமும் மன்னிப்பு கேட்குமாறு பொலிஸ் நிலையத்தின் OIC கோரிக்கை விடுத்துள்ளார். 

குறித்த குழுவினர் மன்னிப்புக் கோரி பொலிஸ் நிலையத்திற்கு வந்தால் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னைத்தானே சுட்டுக் கொள்வதாக கான்ஸ்டபிள் மிரட்டியுள்ளார்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்காத குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் கடிதம் எழுதியுஅறிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பளையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்திய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, 

12 வயதுக்குட்பட்ட தனது சகோதரியின் மகளின் பிள்ளைகள் பொலிஸாரால் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் தந்தை விசாரணைகளை மாத்திரமே மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“எனது சகோதரியின் மகள் வசிக்கும் வீட்டிற்கு ஒரு பொலிஸ் அதிகாரி வந்து அவரது இரண்டு சிறு பிள்ளைகளை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தியுள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த குழந்தைகளின் தந்தை, சிறு குழந்தைகளை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தியது ஏன் என விசாரிக்க பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். 

நடந்த ஒரே சம்பவம் இதுதான். இன்றுதான் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பினேன். அதனால் இந்த சம்பவம் குறித்து எனக்கு அதிகம் தெரியாது,'' என்றார்.


பொலிஸ் நிலையத்தில் அட்டகாசம் செய்த மஹிந்தவின் மைத்துனர். நடந்தது என்ன கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மைத்துனர் தனது இரு மகன்களை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாதுகாப்பு சோதனைக்குட்படுத்தியதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்திற்கு சென்று அட்டகாசம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குடிபோதையில் இருந்த ஒரு குழுவுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற குறித்த சந்தேகநபர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை அச்சுறுத்தியுள்ளார்.பின்னர் விசாரணையை மேற்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிளிடம் இரண்டு பிள்ளைகளிடமும் மன்னிப்பு கேட்குமாறு பொலிஸ் நிலையத்தின் OIC கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த குழுவினர் மன்னிப்புக் கோரி பொலிஸ் நிலையத்திற்கு வந்தால் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னைத்தானே சுட்டுக் கொள்வதாக கான்ஸ்டபிள் மிரட்டியுள்ளார்.அத்துடன், சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்காத குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் கடிதம் எழுதியுஅறிவித்துள்ளார்.இதேவேளை, கம்பளையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்திய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, 12 வயதுக்குட்பட்ட தனது சகோதரியின் மகளின் பிள்ளைகள் பொலிஸாரால் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் தந்தை விசாரணைகளை மாத்திரமே மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.“எனது சகோதரியின் மகள் வசிக்கும் வீட்டிற்கு ஒரு பொலிஸ் அதிகாரி வந்து அவரது இரண்டு சிறு பிள்ளைகளை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தியுள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த குழந்தைகளின் தந்தை, சிறு குழந்தைகளை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தியது ஏன் என விசாரிக்க பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். நடந்த ஒரே சம்பவம் இதுதான். இன்றுதான் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பினேன். அதனால் இந்த சம்பவம் குறித்து எனக்கு அதிகம் தெரியாது,'' என்றார்.

Advertisement

Advertisement

Advertisement