• Nov 23 2024

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்ய மகிந்த கோரிக்கை..!samugammedia

mathuri / Feb 16th 2024, 5:52 am
image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் சூழ்நிலை தற்போது நன்றாக இருப்பதாகவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை தாம் ஏற்கனவே அனுபவித்துவிட்டதாகவும் மொத்த நாடே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்யுமாறு கோருவதனால் அதனை ரத்து செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்கும் முயற்சியானது எதிர்க்கட்சியை சிக்க வைக்கும் ஓர் திட்டமாகவும் இருக்கலாம்.தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யார் என்பது தமக்கு நன்றாக தெரியும் என  குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் தமது வேட்பாளர் வெற்றியீட்டுவார் எனவும் சரியான தருணத்தில் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர,  இந்தியா போன்ற நாடுகளுடன் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜே.வி.பி புரிந்து கொண்டுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்ய மகிந்த கோரிக்கை.samugammedia நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நாட்டின் அரசியல் சூழ்நிலை தற்போது நன்றாக இருப்பதாகவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை தாம் ஏற்கனவே அனுபவித்துவிட்டதாகவும் மொத்த நாடே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்யுமாறு கோருவதனால் அதனை ரத்து செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்கும் முயற்சியானது எதிர்க்கட்சியை சிக்க வைக்கும் ஓர் திட்டமாகவும் இருக்கலாம்.தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யார் என்பது தமக்கு நன்றாக தெரியும் என  குறிப்பிட்டுள்ளார்.எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் தமது வேட்பாளர் வெற்றியீட்டுவார் எனவும் சரியான தருணத்தில் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.இது தவிர,  இந்தியா போன்ற நாடுகளுடன் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜே.வி.பி புரிந்து கொண்டுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement