அரிசி பிரச்சினையை ஒடுக்குவதற்காக ஜனாதிபதி இலங்கையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
ஹட்டனில் நேற்றையதினம்(03) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையை தூய்மைப்படுத்துவது போன்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டால் அதனை ஆளுநர்கள் ஊடாக முன்னெடுக்க முடியும்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் பணிபுரியவில்லை எனவும், மத்திய மற்றும் ஊவா மாகாண ஆளுநராக அவர் இருந்த போது இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.
கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு உத்தியோகத்தர்களை நியமித்து க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும் எனவும், ஜனாதிபதி க்ளீன் ஸ்ரீலங்கா என்ற திட்டத்தை முன்னெடுத்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பவே செயற்படுகின்றார் எனவும் தெரிவித்தார்.
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னெடுத்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப ஜனாதிபதி முயற்சி; மைத்திரி குணரத்ன குற்றச்சாட்டு. அரிசி பிரச்சினையை ஒடுக்குவதற்காக ஜனாதிபதி இலங்கையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.ஹட்டனில் நேற்றையதினம்(03) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இலங்கையை தூய்மைப்படுத்துவது போன்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டால் அதனை ஆளுநர்கள் ஊடாக முன்னெடுக்க முடியும்.ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் பணிபுரியவில்லை எனவும், மத்திய மற்றும் ஊவா மாகாண ஆளுநராக அவர் இருந்த போது இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு உத்தியோகத்தர்களை நியமித்து க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும் எனவும், ஜனாதிபதி க்ளீன் ஸ்ரீலங்கா என்ற திட்டத்தை முன்னெடுத்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பவே செயற்படுகின்றார் எனவும் தெரிவித்தார்.