இலங்கை சுதந்திர கட்சியின் செயற்பாடுகளில் இருந்து விலகுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு கடிதம் மூலம் அவர் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சுதந்திரக் கட்சியின் உரிமை தொடர்பில் நீதிமன்றில் பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அந்த வழக்குகளில் மைத்திரிபால சிறிசேனவும் ஒரு தரப்பாக உள்ளது.
ஆனால் அவரது புதிய முடிவின் மூலம் கட்சியை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என அறியமுடிகிறது.
இதேவேளை அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மைத்திரியின் மகன் தஹாம் சிறிசேன பொலனறுவை மாவட்டத்தில் சுயேட்சையாக களமிறங்கி படுதோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு செல்லும் பொறுப்பு - மைத்திரி எடுத்த திடீர் முடிவு இலங்கை சுதந்திர கட்சியின் செயற்பாடுகளில் இருந்து விலகுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு கடிதம் மூலம் அவர் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது சுதந்திரக் கட்சியின் உரிமை தொடர்பில் நீதிமன்றில் பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அந்த வழக்குகளில் மைத்திரிபால சிறிசேனவும் ஒரு தரப்பாக உள்ளது.ஆனால் அவரது புதிய முடிவின் மூலம் கட்சியை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என அறியமுடிகிறது.இதேவேளை அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மைத்திரியின் மகன் தஹாம் சிறிசேன பொலனறுவை மாவட்டத்தில் சுயேட்சையாக களமிறங்கி படுதோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.