• Jul 28 2025

யாழ்.பல்கலைக்கழக காவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு! மாடியிலிருந்து விழுந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம்

shanuja / Jul 28th 2025, 11:52 am
image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர்  வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த காவலர் ஒருவர்  உயிரிழந்துள்ளார். 


கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ்.பல்கலைக்கழக விவசாய பீட வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த தர்மசீலன் ரகுராஜ்  வயது - 34  என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார். 


உயிரிழப்பையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிபதி , சடலத்தைப்  பார்வையிட்டதன் பின்னர் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். 


குறித்த பாதுகாவலர் விவசாய பீடத்தின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளதாக  கிளிநாச்சி மாவட்ட தடவியல் பொலீஸ் உத்தியோத்தர்கள் தெரிவித்துள்ளனர்.


உயிரிழப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.பல்கலைக்கழக காவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு மாடியிலிருந்து விழுந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர்  வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த காவலர் ஒருவர்  உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ்.பல்கலைக்கழக விவசாய பீட வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த தர்மசீலன் ரகுராஜ்  வயது - 34  என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார். உயிரிழப்பையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிபதி , சடலத்தைப்  பார்வையிட்டதன் பின்னர் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். குறித்த பாதுகாவலர் விவசாய பீடத்தின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளதாக  கிளிநாச்சி மாவட்ட தடவியல் பொலீஸ் உத்தியோத்தர்கள் தெரிவித்துள்ளனர்.உயிரிழப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement