ஆடுகள் வளர்க்கப்படும் ஆட்டுப் பண்ணை ஒன்றில் நேற்று (27) இரவு 10.00 மணியளவில் திடீரென தீ பரவியுள்ளது.
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள செல்வநகர் பகுதியில் உள்ள ஆட்டுப்பண்ணையில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
தீ விபத்தில் ஆட்டுப் பண்ணை முற்றாக தீயில் எரிந்து சேதமாகியுள்ளது. அத்துடன் ஆட்டுப் பண்ணையில் இருந்த 20 க்கும் மேற்பட்ட ஆடுகள் தீ காயங்களுக்குள்ளாகின. எனினும் ஆடுகள் எதுவும் உயிரிழக்கவில்லை.
ஆட்டுப் பண்ணையில் எவ்வாறு தீ பரவியது என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஆட்டுப் பண்ணையில் திடீரன தீ விபத்து; 20க்கும் மேற்பட்ட ஆடுகள் காயம் ஆடுகள் வளர்க்கப்படும் ஆட்டுப் பண்ணை ஒன்றில் நேற்று (27) இரவு 10.00 மணியளவில் திடீரென தீ பரவியுள்ளது.திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள செல்வநகர் பகுதியில் உள்ள ஆட்டுப்பண்ணையில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. தீ விபத்தில் ஆட்டுப் பண்ணை முற்றாக தீயில் எரிந்து சேதமாகியுள்ளது. அத்துடன் ஆட்டுப் பண்ணையில் இருந்த 20 க்கும் மேற்பட்ட ஆடுகள் தீ காயங்களுக்குள்ளாகின. எனினும் ஆடுகள் எதுவும் உயிரிழக்கவில்லை.ஆட்டுப் பண்ணையில் எவ்வாறு தீ பரவியது என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.