• Jan 16 2026

காட்டு விலங்கை கடத்த முற்பட்டவர் கைது!

dileesiya / Dec 12th 2025, 5:51 pm
image

வனஜீவராசி திணைக்களத்திற்குரிய “ உக்குலான்” எனும் காட்டு விலங்கை கொண்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (12) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து சந்தேக நபருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்குச் சொந்தமான குறித்த உக்குலான் எனும் விலங்கினை  காட்டிலிருந்து பிடித்துக் கொண்டு வரும் வழியில் , சேருநுவர -மஹிந்த புர சந்தியில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஈச்சிலம்பற்று -பூநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சேருநுவர குற்றத்தடுப்பு பொலிஸார் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்தே அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   


காட்டு விலங்கை கடத்த முற்பட்டவர் கைது வனஜீவராசி திணைக்களத்திற்குரிய “ உக்குலான்” எனும் காட்டு விலங்கை கொண்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (12) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து சந்தேக நபருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபர் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்குச் சொந்தமான குறித்த உக்குலான் எனும் விலங்கினை  காட்டிலிருந்து பிடித்துக் கொண்டு வரும் வழியில் , சேருநுவர -மஹிந்த புர சந்தியில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் ஈச்சிலம்பற்று -பூநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.சேருநுவர குற்றத்தடுப்பு பொலிஸார் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்தே அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Advertisement

Advertisement

Advertisement