“க்ளீன் ஸ்ரீ லங்கா – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு” என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக நடமாடும் சேவை மற்றும் விஷேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம் இன்றைய தினம் (12) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த செயற்றிட்டம் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, Clean Sri Lanka செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் முல்லைத்தீவு என்பன மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்த நடமாடும் சேவையில் 1109 பேர் கலந்துகொண்டு பயனடைந்திருந்தனர்.
இதன்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கப்பட்டதுடன் வறுமையில் கல்வியைத் தொடரும் ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு தெரிவுசெய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நடமாடும் சேவைகள் மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டத்தில் அண்மைய வெள்ள அனர்த்தம் தொடர்பான மக்களிற்குரிய நிவாரண சேவைகளிற்கு முக்கிய கவனம் செலுத்தப்படும்.
அரச சேவைகளுக்கு பொதுமக்கள் எளிதில் அணுகும் வசதி ஏற்படுத்துதல்,சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை வளர்த்தல்,மக்கள் நேய வினைத்திறனான நிர்வாக அமைப்பை வலுப்படுத்தல் என்பன இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இதே வேளை முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரத்திணைக்களத்தின் விசேட மருத்துவ முகாம், விசேட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வேலை வாய்ப்பு மற்றும் உயர் தொழிற்கல்வி வாய்ப்புகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் பொதுமக்களிற்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் கலாசார நிகழ்வுகள் என்பன மிகச்சிறப்பான முறையில் இடம்பெற்றது.
மக்கள் அனைவரும் குறித்த நடமாடும் சேவையில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவில் மக்கள் நலன்புரி வேலைத்திட்டம் “க்ளீன் ஸ்ரீ லங்கா – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு” என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக நடமாடும் சேவை மற்றும் விஷேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம் இன்றைய தினம் (12) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.குறித்த செயற்றிட்டம் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, Clean Sri Lanka செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் முல்லைத்தீவு என்பன மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.இந்த நடமாடும் சேவையில் 1109 பேர் கலந்துகொண்டு பயனடைந்திருந்தனர்.இதன்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கப்பட்டதுடன் வறுமையில் கல்வியைத் தொடரும் ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு தெரிவுசெய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் வழங்கி வைக்கப்பட்டன.இந்த நடமாடும் சேவைகள் மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டத்தில் அண்மைய வெள்ள அனர்த்தம் தொடர்பான மக்களிற்குரிய நிவாரண சேவைகளிற்கு முக்கிய கவனம் செலுத்தப்படும்.அரச சேவைகளுக்கு பொதுமக்கள் எளிதில் அணுகும் வசதி ஏற்படுத்துதல்,சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை வளர்த்தல்,மக்கள் நேய வினைத்திறனான நிர்வாக அமைப்பை வலுப்படுத்தல் என்பன இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.இதே வேளை முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரத்திணைக்களத்தின் விசேட மருத்துவ முகாம், விசேட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வேலை வாய்ப்பு மற்றும் உயர் தொழிற்கல்வி வாய்ப்புகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் பொதுமக்களிற்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் கலாசார நிகழ்வுகள் என்பன மிகச்சிறப்பான முறையில் இடம்பெற்றது. மக்கள் அனைவரும் குறித்த நடமாடும் சேவையில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.