வாடகைக்கு எடுத்த மோட்டார் சைக்கிள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த சந்தேக நபரை பலங்கொடை பொலிஸார் இரத்தினபுரி, சன்னஸ்கம பிரதேசத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
சில மாதங்கள் வாடகைக்கு வேண்டும் என்று கூறி பதிவுப் புத்தகங்களுடன் மோட்டார் சைக்கிள்களைப் பெற்று, சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி, பலங்கொடை உள்ளிட்ட பல பிரதேசங்களில் வாகனங்களை வாடகைக்கு விடும் நபர்களிடமிருந்து சந்தேகநபர் இவ்வாறு மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் கைது செய்யப்படும்போது, விற்பனை செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட 6 மோட்டார் சைக்கிள்களைக் பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.
வாடகை மோட்டார் சைக்கிளை சட்டவிரோதமாக விற்றவர் கைது. வாடகைக்கு எடுத்த மோட்டார் சைக்கிள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த சந்தேக நபரை பலங்கொடை பொலிஸார் இரத்தினபுரி, சன்னஸ்கம பிரதேசத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். சில மாதங்கள் வாடகைக்கு வேண்டும் என்று கூறி பதிவுப் புத்தகங்களுடன் மோட்டார் சைக்கிள்களைப் பெற்று, சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இரத்தினபுரி, பலங்கொடை உள்ளிட்ட பல பிரதேசங்களில் வாகனங்களை வாடகைக்கு விடும் நபர்களிடமிருந்து சந்தேகநபர் இவ்வாறு மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் கைது செய்யப்படும்போது, விற்பனை செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட 6 மோட்டார் சைக்கிள்களைக் பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.சந்தேகநபர் பலங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.