• Apr 28 2025

ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது

Tharun / May 30th 2024, 7:31 pm
image

புஸ்ஸ பிரதேசத்தில் நீண்டகாலமாக ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் காலி புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புஸ்ஸ பிரதேசத்தில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

அங்கு 6 கிராம் 90 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பணம், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

ரத்கம காவல்துறையினர் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது புஸ்ஸ பிரதேசத்தில் நீண்டகாலமாக ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.விசேட அதிரடிப்படையின் காலி புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புஸ்ஸ பிரதேசத்தில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.அங்கு 6 கிராம் 90 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பணம், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.ரத்கம காவல்துறையினர் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now