• Apr 30 2025

மனைவியையும், குடும்பத்தினரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன் தலைமறைவு

Chithra / Apr 29th 2025, 12:21 pm
image


மனைவியையும், மனைவியின் குடும்பத்தினரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் கணவன் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் மனைவியும், மாமனாரும், மாமியாரும் மைத்துனியுமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியையும், குடும்பத்தினரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன் தலைமறைவு மனைவியையும், மனைவியின் குடும்பத்தினரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் கணவன் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.சந்தேக நபரின் மனைவியும், மாமனாரும், மாமியாரும் மைத்துனியுமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement