• Jan 11 2025

யாழில் பாண் சாப்பிட்டுக்கொண்டு இருந்த நபர் திடீரென உயிரிழப்பு

Chithra / Dec 29th 2024, 10:29 am
image

 

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உணவு அருந்திக்கொண்டு இருந்த நபர் உடல் சுகவீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று (28) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, உரும்பிராய் வடக்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த காசிப்பிள்ளை குவேந்திரன் (வயது 62) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

குறித்த நபர் இன்று மதியம் பாண் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவேளை அவருக்கு மூச்சு விட சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் சிகிச்சைக்காக குறித்த நபரை கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆஸ்துமா காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் பாண் சாப்பிட்டுக்கொண்டு இருந்த நபர் திடீரென உயிரிழப்பு  யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உணவு அருந்திக்கொண்டு இருந்த நபர் உடல் சுகவீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்று (28) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது, உரும்பிராய் வடக்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த காசிப்பிள்ளை குவேந்திரன் (வயது 62) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் இன்று மதியம் பாண் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவேளை அவருக்கு மூச்சு விட சிரமம் ஏற்பட்டுள்ளது.இந்தநிலையில் சிகிச்சைக்காக குறித்த நபரை கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்தார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஆஸ்துமா காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement