• Dec 12 2024

ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற நபர் பரிதாப மரணம் - தமிழர் பகுதியில் சோகம்

Chithra / Dec 12th 2024, 11:44 am
image

 


கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற நபரொருவர் வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக  நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தரான கணேசமூர்த்தி குலேந்திரன் எனும் வயது 33 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம்  ஆற்றில் மீன்பிடிக்க சென்றபோது வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக நீரில் மூழ்தி உயிரிழந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற நபர் பரிதாப மரணம் - தமிழர் பகுதியில் சோகம்  கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற நபரொருவர் வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக  நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தரான கணேசமூர்த்தி குலேந்திரன் எனும் வயது 33 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நேற்றைய தினம்  ஆற்றில் மீன்பிடிக்க சென்றபோது வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக நீரில் மூழ்தி உயிரிழந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement