ஓடும் ரயிலில் நபரொருவர் பாம்மை வைத்திருந்து பயணிகளிடம் பணம் பறித்த சம்பவம் காணொளியாக வெளிவந்து வைரலாகியுள்ளது.
அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மத்திய பிரதேச மாநிலம் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தது.
அவ்வேளையில் மத்திய பிரதேசத்தின் மங்காலி என்ற ரயில் நிலையத்தில் தரித்து நின்ற குறித்த ரயிலில் பயணி ஒருவர் ஏறியுள்ளார்.
ரயில் புறப்பட்டதும், அவர் திடீரென மறைத்து வைத்திருந்த பாம்பை வெளியே எடுத்துள்ளார். இதனால் பயணிகள் பதறியடித்து அச்சத்தில் உறைந்துள்ளனர்.
வெளியே எடுத்த பாம்பை காட்டி பயணிகளை மிரட்டி பணம் கேட்டுள்ளார். பயணிகளும் அச்சமடைந்து உடனே பணம் கொடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை ரயிலில் பயணித்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
குறித்த வீடியோ வைரலாகி, பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்த கொண்ட அந்த நபர்
மீது ரயில்வே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோவைப் பார்த்த பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்த பயணி, ரயில்வேக்கும் முறைப்பாடு அளித்துள்ளார்.
முறைப்பாட்டையடுத்து ரயில்சேவா தனது எக்ஸ் பக்கத்தில், ஆர்.பி.எஃப்.-க்கு உத்தரவிட மேலும், விரிவான விவரங்களை பகிரவும் எனவும் பதில் அளித்துள்ளது.
ரயிலில் பாம்மை வைத்து மிரட்டி பணம் பறித்த நபர்; பதறியடித்த பயணிகள் ஓடும் ரயிலில் நபரொருவர் பாம்மை வைத்திருந்து பயணிகளிடம் பணம் பறித்த சம்பவம் காணொளியாக வெளிவந்து வைரலாகியுள்ளது. அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மத்திய பிரதேச மாநிலம் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தது. அவ்வேளையில் மத்திய பிரதேசத்தின் மங்காலி என்ற ரயில் நிலையத்தில் தரித்து நின்ற குறித்த ரயிலில் பயணி ஒருவர் ஏறியுள்ளார். ரயில் புறப்பட்டதும், அவர் திடீரென மறைத்து வைத்திருந்த பாம்பை வெளியே எடுத்துள்ளார். இதனால் பயணிகள் பதறியடித்து அச்சத்தில் உறைந்துள்ளனர்.வெளியே எடுத்த பாம்பை காட்டி பயணிகளை மிரட்டி பணம் கேட்டுள்ளார். பயணிகளும் அச்சமடைந்து உடனே பணம் கொடுத்துள்ளனர். இந்தச் சம்பவத்தை ரயிலில் பயணித்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த வீடியோ வைரலாகி, பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்த கொண்ட அந்த நபர்மீது ரயில்வே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோவைப் பார்த்த பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்த பயணி, ரயில்வேக்கும் முறைப்பாடு அளித்துள்ளார். முறைப்பாட்டையடுத்து ரயில்சேவா தனது எக்ஸ் பக்கத்தில், ஆர்.பி.எஃப்.-க்கு உத்தரவிட மேலும், விரிவான விவரங்களை பகிரவும் எனவும் பதில் அளித்துள்ளது.