• Sep 28 2024

இறைச்சிக்காக வைத்திருந்த ஆமையுடன் சிக்கிய நபருக்கு அபராதம்

Chithra / Sep 27th 2024, 5:06 pm
image

Advertisement


காலி - கலேகன பகுதியில் ஆமை ஒன்றை வைத்திருந்த நபரொருவருக்கு காலி பிரதான நீதவான் இசுரு நெத்திகுமாரவினால் 35,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காலி கலேகன பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ரணேபுர ஹேவகே அஜித் என்பவரிடமிருந்து நான்கு கிலோ எடையுடைய ஆமை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையில் தனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள குளமொன்றில் இனப்பெருக்கம் செய்வதற்காக இந்த ஆமையை கொண்டு செல்வதாக தெரிவித்திருந்தார்.

மேலதிக விசாரணைகளில் குறித்த ஆமையை இறைச்சிக்காக விற்பனை செய்யவிருந்தமை தெரியவந்துள்ளது. 

இந்த ஆமை ஹிக்கடுவ வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இறைச்சிக்காக வைத்திருந்த ஆமையுடன் சிக்கிய நபருக்கு அபராதம் காலி - கலேகன பகுதியில் ஆமை ஒன்றை வைத்திருந்த நபரொருவருக்கு காலி பிரதான நீதவான் இசுரு நெத்திகுமாரவினால் 35,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.காலி கலேகன பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ரணேபுர ஹேவகே அஜித் என்பவரிடமிருந்து நான்கு கிலோ எடையுடைய ஆமை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.ஆரம்பகட்ட விசாரணையில் தனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள குளமொன்றில் இனப்பெருக்கம் செய்வதற்காக இந்த ஆமையை கொண்டு செல்வதாக தெரிவித்திருந்தார்.மேலதிக விசாரணைகளில் குறித்த ஆமையை இறைச்சிக்காக விற்பனை செய்யவிருந்தமை தெரியவந்துள்ளது. இந்த ஆமை ஹிக்கடுவ வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement