• Mar 25 2025

அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதி

Chithra / Feb 12th 2025, 10:33 am
image

யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவின் தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு இராமநாதன் அர்ச்சனா சென்று அங்கு காணொளி பதிவில் ஈடுபட்டார். 

இதன் போது அங்கு நின்ற நபர் தன்னை காணொளி பதிவு செய்ய வேண்டாம் என அர்ச்சுனாவிடம் தெரிவித்திருந்தார்.

இதன்போது அர்ச்சனா அதனை மீறி காணொளி பதிவில் ஈடுபட்டார். இந்நிலையில் அர்ச்சுனாவுக்கும் குறித்த நபருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இதன்போது அர்ச்சுனா பீங்கான் ஒன்றினை எடுத்து குறித்த நபரின் தலையில் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அர்ச்சனா, குறித்த நபர் தன் மீது தாக்குதல் நடாத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதி யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவின் தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,நேற்று இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு இராமநாதன் அர்ச்சனா சென்று அங்கு காணொளி பதிவில் ஈடுபட்டார். இதன் போது அங்கு நின்ற நபர் தன்னை காணொளி பதிவு செய்ய வேண்டாம் என அர்ச்சுனாவிடம் தெரிவித்திருந்தார்.இதன்போது அர்ச்சனா அதனை மீறி காணொளி பதிவில் ஈடுபட்டார். இந்நிலையில் அர்ச்சுனாவுக்கும் குறித்த நபருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இதன்போது அர்ச்சுனா பீங்கான் ஒன்றினை எடுத்து குறித்த நபரின் தலையில் தாக்கியுள்ளார்.இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அர்ச்சனா, குறித்த நபர் தன் மீது தாக்குதல் நடாத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement