• Nov 22 2024

பாரிய விபத்தில் சிக்கிய நபர்..! 30 நிமிட முயற்சியின் பின் போராடி காப்பாற்றிய இளைஞர்கள்..!

Chithra / Dec 13th 2023, 9:03 am
image

 

களுத்துறை - வஸ்கடுவ இளைஞர்கள் குழுவொன்று லொறியில் மோதியதன் பின்னர் வேனில் சிக்கிய நபரை மீட்டு உயிரை காப்பாற்றியுள்ளனர்.

30 நிமிட பாரிய முயற்சியின் பின்னர் குறித்த இளைஞனின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சிறிய லொறி, வஸ்கடுவ பகுதியில் வைத்து அதிவேகமாக பின்னால் வந்த வேன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெரும் சத்தத்துடன் இந்த விபத்து நடந்துள்ளது.

இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் குழு ஒன்று உடனடியாக அங்கு வந்து சிக்கிய நபரின் உயிரை காப்பாற்ற போராடியுள்ளனர்.

அதற்கமைய, 30 நிமிட நடவடிக்கையில் அந்த நபர் மீட்கப்பட்டுள்ளார்.


அதே நேரத்தில், 1990 அம்பியுலன்ஸ் சேவையும் அந்தப் பகுதியை வந்தடைந்த நிலையில், அவர்களின் அறிவுறுத்தல்களின்படி மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர்.

அதற்குள் இளைஞர்கள் காயமடைந்த நபரை மீட்டு களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

பாரிய விபத்தில் சிக்கிய நபர். 30 நிமிட முயற்சியின் பின் போராடி காப்பாற்றிய இளைஞர்கள்.  களுத்துறை - வஸ்கடுவ இளைஞர்கள் குழுவொன்று லொறியில் மோதியதன் பின்னர் வேனில் சிக்கிய நபரை மீட்டு உயிரை காப்பாற்றியுள்ளனர்.30 நிமிட பாரிய முயற்சியின் பின்னர் குறித்த இளைஞனின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சிறிய லொறி, வஸ்கடுவ பகுதியில் வைத்து அதிவேகமாக பின்னால் வந்த வேன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.பெரும் சத்தத்துடன் இந்த விபத்து நடந்துள்ளது.இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் குழு ஒன்று உடனடியாக அங்கு வந்து சிக்கிய நபரின் உயிரை காப்பாற்ற போராடியுள்ளனர்.அதற்கமைய, 30 நிமிட நடவடிக்கையில் அந்த நபர் மீட்கப்பட்டுள்ளார்.அதே நேரத்தில், 1990 அம்பியுலன்ஸ் சேவையும் அந்தப் பகுதியை வந்தடைந்த நிலையில், அவர்களின் அறிவுறுத்தல்களின்படி மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர்.அதற்குள் இளைஞர்கள் காயமடைந்த நபரை மீட்டு களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

Advertisement

Advertisement

Advertisement