• Jan 11 2025

நபரொருவரை கடத்திச் சென்று கொடூரமாக தாக்கிய கும்பல் - கொழும்பில் பயங்கரம்

Chithra / Dec 30th 2024, 10:18 am
image


கொழும்பின் புறநகர்ப் பகுதியான மட்டக்குளியிலுள்ள சமித்புர வீடொன்றிற்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த ஒருவரை கடத்திச் சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கி வாழைத்தோட்டம் பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரைக் கடத்த முச்சக்கரவண்டியொன்றில் 6 பேர் வந்ததாக கூறப்பட்டாலும், 

முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் அதிகமானோர் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான தகராறே கடத்தலுக்கான காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நபரொருவரை கடத்திச் சென்று கொடூரமாக தாக்கிய கும்பல் - கொழும்பில் பயங்கரம் கொழும்பின் புறநகர்ப் பகுதியான மட்டக்குளியிலுள்ள சமித்புர வீடொன்றிற்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த ஒருவரை கடத்திச் சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கி வாழைத்தோட்டம் பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த நபரைக் கடத்த முச்சக்கரவண்டியொன்றில் 6 பேர் வந்ததாக கூறப்பட்டாலும், முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் அதிகமானோர் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ள்ளார்.போதைப்பொருள் தொடர்பான தகராறே கடத்தலுக்கான காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement