• Nov 10 2024

காசை காலால் மிதித்தவர் ஆட்பிணையில் விடுவிப்பு!

Tamil nila / Jul 9th 2024, 11:28 pm
image

இலங்கை நாணயத்தாளை காலால் மிதித்து அவமானப்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலையாகிய தியாகி அறக்கொடை நிறுவுனர், இன்று  ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அண்மையில் குறித்த தொழிலதிபர் நாணயத்தாள்களை நிலத்தில் போட்டு காலால் மிதித்த காணொளி ஊடகங்களில் வெளியாகி இருந்தது. 

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன் போது அவர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, அவரது சோர்வே நாணயத்தாள்களை மிரித்தமைக்கு காரணம் என தெரிவித்தார். 

சட்டத்தரணி முன்வைத்த காரணத்தை ஏற்க மறுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, மனநிலையை வைத்து அவர் நீதிமன்றுக்கு கல் எறிந்தால் ஏற்றுக்கொள்வீர்களா எனவும் அவரது செயற்பாடு பற்றிய காணொளியை வெளியிட்டால் ஏற்றுக்கொள்வீர்களா? எனவும் கேள்வி எழுப்பியது.

எனினும் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற பிரிவு முன்வைத்த குற்றச்சாட்டில் இருந்து  மன்று இரண்டு ஆள்பிணையில் தியாகேந்திரனை விடுவித்து உத்தரவிட்டது.


காசை காலால் மிதித்தவர் ஆட்பிணையில் விடுவிப்பு இலங்கை நாணயத்தாளை காலால் மிதித்து அவமானப்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலையாகிய தியாகி அறக்கொடை நிறுவுனர், இன்று  ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டார்.அண்மையில் குறித்த தொழிலதிபர் நாணயத்தாள்களை நிலத்தில் போட்டு காலால் மிதித்த காணொளி ஊடகங்களில் வெளியாகி இருந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது அவர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, அவரது சோர்வே நாணயத்தாள்களை மிரித்தமைக்கு காரணம் என தெரிவித்தார். சட்டத்தரணி முன்வைத்த காரணத்தை ஏற்க மறுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, மனநிலையை வைத்து அவர் நீதிமன்றுக்கு கல் எறிந்தால் ஏற்றுக்கொள்வீர்களா எனவும் அவரது செயற்பாடு பற்றிய காணொளியை வெளியிட்டால் ஏற்றுக்கொள்வீர்களா எனவும் கேள்வி எழுப்பியது.எனினும் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற பிரிவு முன்வைத்த குற்றச்சாட்டில் இருந்து  மன்று இரண்டு ஆள்பிணையில் தியாகேந்திரனை விடுவித்து உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

Advertisement