• Nov 24 2024

மத்தல விமான நிலையத்தின் முகாமைத்தும்; முன்னைய அரசின் திட்டத்தை கைவிட்ட அநுர?

Chithra / Nov 8th 2024, 2:27 pm
image

 

மத்தல விமானநிலையத்தின் முகாமைத்துவத்தை இந்திய இலங்கை கூட்டு முயற்சியிடம் ஒப்படைக்கும் முன்னைய அரசாங்கத்தின் திட்டத்தினை  இலங்கை அரசாங்கம் கைவிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்ட தடைகளை மீறி இந்திய - ரஸ்ய கூட்டு முயற்சிக்கு அனுமதி வழங்க இலங்கை அதிகாரிகள் தயாராகயில்லை என்பதால் இந்த திட்டம் கைவிடப்படுவதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னைய அரசாங்கம் மத்தல விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை இந்தியாவின் சௌர்யா ஏரோநோட்டிக்ஸ் மற்றும் ரஸ்யாவின் எயர்போர்ட் ஒவ் ரீஜன்சிடம் கையளிக்க தீர்மானித்தது.

இதற்கு அனுமதி வழங்குவதற்காக உடன்படிக்கையின் நகல் வடிவத்தை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பியிருந்தனர்.

எனினும் இலங்கையில் விமான நிலைய போக்குவரத்து அதிகார சபைக்கு மாத்திரமே விமான நிலையங்களை முகாமைத்துவம் செய்யும் அதிகாரம் உள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை அரசாங்கம் மத்தல விமானநிலையத்தின் முகாமைத்துவத்தினை வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையளிக்க தயாரில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்தல விமான நிலையத்தின் முகாமைத்தும்; முன்னைய அரசின் திட்டத்தை கைவிட்ட அநுர  மத்தல விமானநிலையத்தின் முகாமைத்துவத்தை இந்திய இலங்கை கூட்டு முயற்சியிடம் ஒப்படைக்கும் முன்னைய அரசாங்கத்தின் திட்டத்தினை  இலங்கை அரசாங்கம் கைவிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சட்ட தடைகளை மீறி இந்திய - ரஸ்ய கூட்டு முயற்சிக்கு அனுமதி வழங்க இலங்கை அதிகாரிகள் தயாராகயில்லை என்பதால் இந்த திட்டம் கைவிடப்படுவதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.முன்னைய அரசாங்கம் மத்தல விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை இந்தியாவின் சௌர்யா ஏரோநோட்டிக்ஸ் மற்றும் ரஸ்யாவின் எயர்போர்ட் ஒவ் ரீஜன்சிடம் கையளிக்க தீர்மானித்தது.இதற்கு அனுமதி வழங்குவதற்காக உடன்படிக்கையின் நகல் வடிவத்தை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பியிருந்தனர்.எனினும் இலங்கையில் விமான நிலைய போக்குவரத்து அதிகார சபைக்கு மாத்திரமே விமான நிலையங்களை முகாமைத்துவம் செய்யும் அதிகாரம் உள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.மேலும் இலங்கை அரசாங்கம் மத்தல விமானநிலையத்தின் முகாமைத்துவத்தினை வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையளிக்க தயாரில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement