• Nov 22 2024

பொதுத்துறை சேவைகளின்போது கட்டாயமாக்கப்பட்டுள்ள அடையாள எண்! மக்களுக்கு வெளியான அறிவிப்பு

Chithra / Sep 1st 2024, 12:31 pm
image

 

பொதுத்துறையின் செயல்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்காக, பொதுமக்கள் அரச சேவைகளை அணுகும் போது, தேசிய அடையாள அட்டை எண், கடவுச்சீட்டு எண் அல்லது நிறுவனப் பதிவு எண் ஆகிய மூன்று முக்கிய அடையாள எண்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயமாகச் சேர்ப்பது குறித்து அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், அரச வங்கிகள், அரச பல்கலைக்கழகங்கள், அரச உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் சுற்றறிக்கை மூலம் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குடிமக்கள் பொதுச்சேவைகளை அணுகும்போது அரசாங்க தகவல் தொழில்நுட்ப அமைப்புகளில் குறித்த மூன்று எண்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று சுற்றறிக்கை வலியுறுத்தியுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு ஆகஸ்ட் 5 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதைத் தொடர்ந்து இலக்க அடிப்படையிலான தரவுத்தள அமைப்புகளை அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  

பொதுத்துறை சேவைகளின்போது கட்டாயமாக்கப்பட்டுள்ள அடையாள எண் மக்களுக்கு வெளியான அறிவிப்பு  பொதுத்துறையின் செயல்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்காக, பொதுமக்கள் அரச சேவைகளை அணுகும் போது, தேசிய அடையாள அட்டை எண், கடவுச்சீட்டு எண் அல்லது நிறுவனப் பதிவு எண் ஆகிய மூன்று முக்கிய அடையாள எண்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயமாகச் சேர்ப்பது குறித்து அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அமைச்சின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், அரச வங்கிகள், அரச பல்கலைக்கழகங்கள், அரச உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் சுற்றறிக்கை மூலம் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.குடிமக்கள் பொதுச்சேவைகளை அணுகும்போது அரசாங்க தகவல் தொழில்நுட்ப அமைப்புகளில் குறித்த மூன்று எண்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று சுற்றறிக்கை வலியுறுத்தியுள்ளது.நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு ஆகஸ்ட் 5 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதைத் தொடர்ந்து இலக்க அடிப்படையிலான தரவுத்தள அமைப்புகளை அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement