• Oct 30 2024

மன்னார் பாலியாறு நீர்த்திட்டம் அமைச்சர் ஜீவன் தலைமையில் அங்குரார்ப்பணம்...!

Sharmi / May 15th 2024, 6:08 pm
image

Advertisement

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுக்கமைவாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொட்டமானின் தலைமையில் மன்னார் வெள்ளாங்குளம் பாலியாறு நீர்த்திட்டம் இன்றையதினம்(15)  வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

116 பில்லியன் ரூபா செலவில் வடமாகாண மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதை மையமாக கொண்டு மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நீர் சேகரிப்பு மற்றும் நீர் பயன்பாட்டை வினைத்திறனாக்க கூடிய வகையில் மேற்கொள்ளப்படவுள்ள  வெள்ளாங்குளம் - மன்னார் பாலியாறு நீர்த்திட்டம் மற்றும் மல்லாவி முல்லைத்தீவு நீர்வழங்கல் திட்ட அலுவலகமும் சம்பிரதாயபூர்வ இன்றையதினம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், வடமாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம். சார்ல்ஸ், பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான கே.காதர் மஸ்தான், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் திலீபன்,  அமைச்சின் செயலாளர் நபீல்,  பொதுமுகாமையாளர் பாரதிதாசன் இணைந்து பாலியாறு திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

குறித்த நிகழ்வில்  நீர்வழங்கல் அதிகார சபையின் அதிகாரிகள்,பொதுமக்கள்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


மன்னார் பாலியாறு நீர்த்திட்டம் அமைச்சர் ஜீவன் தலைமையில் அங்குரார்ப்பணம்.  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுக்கமைவாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொட்டமானின் தலைமையில் மன்னார் வெள்ளாங்குளம் பாலியாறு நீர்த்திட்டம் இன்றையதினம்(15)  வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.116 பில்லியன் ரூபா செலவில் வடமாகாண மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதை மையமாக கொண்டு மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நீர் சேகரிப்பு மற்றும் நீர் பயன்பாட்டை வினைத்திறனாக்க கூடிய வகையில் மேற்கொள்ளப்படவுள்ள  வெள்ளாங்குளம் - மன்னார் பாலியாறு நீர்த்திட்டம் மற்றும் மல்லாவி முல்லைத்தீவு நீர்வழங்கல் திட்ட அலுவலகமும் சம்பிரதாயபூர்வ இன்றையதினம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.இந் நிகழ்வில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், வடமாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம். சார்ல்ஸ், பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான கே.காதர் மஸ்தான், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் திலீபன்,  அமைச்சின் செயலாளர் நபீல்,  பொதுமுகாமையாளர் பாரதிதாசன் இணைந்து பாலியாறு திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.குறித்த நிகழ்வில்  நீர்வழங்கல் அதிகார சபையின் அதிகாரிகள்,பொதுமக்கள்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement