• Nov 24 2024

மன்னாரில் நீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டி வலை தொழில் - மீனவ சங்கத் தலைவர் குற்றச்சாட்டு!

Chithra / Aug 3rd 2024, 4:18 pm
image

 


மன்னார் நீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டி வேலை தொழில் இடம்பெற்று வருவதாக மன்னார் வங்காளை கிராம மீனவ சங்கத் தலைவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கடந்த புதன்கிழமை யாழில் இடம்பெற்ற வடக்கு கிழக்கு இளையோர் மீனவக் கூட்டமைப்பு அங்குரார்ப்பாண நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில், 

வடக்கு கிழக்கு இளைஞர் மீனவர் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம். ஏனெனில் வடக்கு கிழக்கில் உள்ள மீனவ மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் இளம் சமூகம் கூட்டாக இணைந்து எமது பிரச்சினை தொடர்பில் குரல் கொடுப்பதற்கு இந்த அமைப்பு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். 

வடக்கு கிழக்கில் சட்டவிரோத மீன்பிடி தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் 2011 ஆம் ஆண்டு மன்னாரில் பட்டி வலையை நிறுத்துமாறு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்பில் பட்டி வலையை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும்  நீதிமன்ற தீர்ப்பை மீறி இன்று வரை தொடர்ச்சியாக பட்டி வலைத் தொழில் இடம் பெற்று வருகிறது. 

வடக்கு கிழக்கு கடலில் சட்டவிரோத தொழில்களை நிறுத்தாது விட்டால் எதிர்காலத்தில் மீன் இனங்களை கடலில் காண முடியாத நிலை ஏற்படும்.

ஆகவே வடக்கு கிழக்கு இளம் மீனவ கூட்டமைப்பு வடக்கு கிழக்கு கடல்களில் இடம்பெறும் சட்ட விரோத தொழில்களை தடுப்பதற்கு முன்வருவதோடு அதற்கு எதிராக ஒன்று இணைந்த போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னாரில் நீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டி வலை தொழில் - மீனவ சங்கத் தலைவர் குற்றச்சாட்டு  மன்னார் நீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டி வேலை தொழில் இடம்பெற்று வருவதாக மன்னார் வங்காளை கிராம மீனவ சங்கத் தலைவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.கடந்த புதன்கிழமை யாழில் இடம்பெற்ற வடக்கு கிழக்கு இளையோர் மீனவக் கூட்டமைப்பு அங்குரார்ப்பாண நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு இளைஞர் மீனவர் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம். ஏனெனில் வடக்கு கிழக்கில் உள்ள மீனவ மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் இளம் சமூகம் கூட்டாக இணைந்து எமது பிரச்சினை தொடர்பில் குரல் கொடுப்பதற்கு இந்த அமைப்பு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். வடக்கு கிழக்கில் சட்டவிரோத மீன்பிடி தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் 2011 ஆம் ஆண்டு மன்னாரில் பட்டி வலையை நிறுத்துமாறு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.நீதிமன்ற தீர்ப்பில் பட்டி வலையை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும்  நீதிமன்ற தீர்ப்பை மீறி இன்று வரை தொடர்ச்சியாக பட்டி வலைத் தொழில் இடம் பெற்று வருகிறது. வடக்கு கிழக்கு கடலில் சட்டவிரோத தொழில்களை நிறுத்தாது விட்டால் எதிர்காலத்தில் மீன் இனங்களை கடலில் காண முடியாத நிலை ஏற்படும்.ஆகவே வடக்கு கிழக்கு இளம் மீனவ கூட்டமைப்பு வடக்கு கிழக்கு கடல்களில் இடம்பெறும் சட்ட விரோத தொழில்களை தடுப்பதற்கு முன்வருவதோடு அதற்கு எதிராக ஒன்று இணைந்த போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement