மன்னாரில் இருந்து கணிய மண் அகழ்வதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் தீவில் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இன்று(23) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மன்னார் தீவிலிருந்து கணிய மண் அகழ்வதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மன்னார் தீவையே முற்றுமுழுதாக அழிக்கும் செயற்பாடாகவே இருக்கும் என்பது எங்களுக்கு தெளிவாக தெரிவிக்கின்றது.
மன்னார் தீவு நிலையான தீவாக இருப்பதற்கு சில பாதுகாப்பு அரண்கள் தேவைப்படுகின்றது.
அதாவது கடல் மட்டத்திலிருந்து சற்று குறைவான நிலையில் இருக்கும் தீவாக மன்னார் தீவு காணப்படுவதால் இது மிகவும் கவனமாக பாதுகாக்கப்படவேண்டிய ஒரு தீவு.
இதனுடைய சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அது மன்னார் தீவையே அழிப்பதற்கான சாத்தியப்பாட்டை மேலும் அதிகரிப்பதாகவே காணப்படும்.
எனவே, குறித்த பகுதியில் கணிய மணல் அகழ்வதை நாம் முற்றாக எதிர்ப்பதோடு அதனை எல்லா வழிகளிலும் நாம் தடுப்போம் எனவும் தெரிவித்தார்.
மன்னார் தீவு முற்றுமுழுதாக அழிவடையும் அபாயம். ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை. சுமந்திரன் எம்.பி திட்டவட்டம். மன்னாரில் இருந்து கணிய மண் அகழ்வதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.மன்னார் தீவில் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இன்று(23) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.மன்னார் தீவிலிருந்து கணிய மண் அகழ்வதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மன்னார் தீவையே முற்றுமுழுதாக அழிக்கும் செயற்பாடாகவே இருக்கும் என்பது எங்களுக்கு தெளிவாக தெரிவிக்கின்றது.மன்னார் தீவு நிலையான தீவாக இருப்பதற்கு சில பாதுகாப்பு அரண்கள் தேவைப்படுகின்றது.அதாவது கடல் மட்டத்திலிருந்து சற்று குறைவான நிலையில் இருக்கும் தீவாக மன்னார் தீவு காணப்படுவதால் இது மிகவும் கவனமாக பாதுகாக்கப்படவேண்டிய ஒரு தீவு.இதனுடைய சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அது மன்னார் தீவையே அழிப்பதற்கான சாத்தியப்பாட்டை மேலும் அதிகரிப்பதாகவே காணப்படும்.எனவே, குறித்த பகுதியில் கணிய மணல் அகழ்வதை நாம் முற்றாக எதிர்ப்பதோடு அதனை எல்லா வழிகளிலும் நாம் தடுப்போம் எனவும் தெரிவித்தார்.