• Jun 16 2024

மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய ரயில்; மூன்று இளைஞர்கள் ஸ்தலத்தில் சாவு..! தென்னிலங்கையில் பயங்கரம்

Chithra / May 23rd 2024, 8:16 pm
image

Advertisement

 

காலி, புஸ்ஸ, பிந்தலிய சந்தியில் உள்ள பாதுகாப்பு கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரயில் கடவையின் பாதுகாப்பற்ற சமிஞ்சை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த மூன்று இளைஞர்களும் 17 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த கடவையில் உரிய முறையில் சமிஞ்சை செயற்படவில்லை என நேரில் பார்த்த பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மூன்று பேர் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய ரயில்; மூன்று இளைஞர்கள் ஸ்தலத்தில் சாவு. தென்னிலங்கையில் பயங்கரம்  காலி, புஸ்ஸ, பிந்தலிய சந்தியில் உள்ள பாதுகாப்பு கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ரயில் கடவையின் பாதுகாப்பற்ற சமிஞ்சை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் உயிரிழந்த மூன்று இளைஞர்களும் 17 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.குறித்த கடவையில் உரிய முறையில் சமிஞ்சை செயற்படவில்லை என நேரில் பார்த்த பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் மூன்று பேர் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement