• Feb 12 2025

மன்னார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் - சந்தேகநபர்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

Chithra / Feb 11th 2025, 8:18 am
image

 

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த மாதம் 16 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட 7 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

கைதானவர்கள் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 

இதன்போது, அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

இத்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் புலனாய்வுத்துறையினர் முன்னெடுத்து வருவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.  

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த 16 ஆம் திகதி வழக்கு விசாரணை ஒன்றிற்காகப் பிரவேசித்தவர்களை இலக்கு வைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 

இந்த தாக்குதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததோடு பெண் ஒருவர் உள்ளடங்கலாக 2 பேர் படுகாயமடைந்தனர்.

மன்னார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் - சந்தேகநபர்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு  மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த மாதம் 16 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட 7 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கைதானவர்கள் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இத்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் புலனாய்வுத்துறையினர் முன்னெடுத்து வருவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.  மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த 16 ஆம் திகதி வழக்கு விசாரணை ஒன்றிற்காகப் பிரவேசித்தவர்களை இலக்கு வைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததோடு பெண் ஒருவர் உள்ளடங்கலாக 2 பேர் படுகாயமடைந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement