“சொல் அல்ல செயல் என்பதே எமது தலைவரின் அரசியல் ஸ்டைல். மக்களும் இதை பெரிதும் வரவேற்கின்றனர். அதேபோல மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றார்.
இதனால் மக்கள் மத்தியில் அவருக்கான ஆதரவு அலை வீசுகின்றது. இதனை சகித்துகொள்ள முடியாமலேயே மனோ கணேசனும், வேலுகுமாரும் கொக்கரித்து வருகின்றனர்.” -என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவர் எஸ்.ரூபதர்ஷன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“ தங்களால் முடியாது, தாங்கள் வெத்து வேட்டூகள் என்பதை தன்னை தேசிய தலைவராகக் கூறிக்கொள்ளும் மனோ கணேசன் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றார். தனக்கு வாக்களித்த கொழும்பு மாவட்ட மக்களுக்கு சேவை செய்யாமல் அறிக்கைகளை மாத்திரமே விடுத்து வரும் அவரின் அரசியல் எதிர்காலம் ஆட்டம் கண்டுள்ளது.
மலையக மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி கிடைத்துவிட்டால், வீடுகள் கிடைத்துவிட்டால் தம்மால் அரசியல் செய்ய முடியாது என்ற அச்சமே, அவர்களை பதற்றமடைய வைத்துள்ளது. அந்த பதற்றத்தாலேயே ஏதேதோ கூற துவங்கியுள்ளனர்.
பெரிய கணேசன் சொல்வதைத்தான் சின்ன தலைவர் செய்வாராம், அட போங்க…காமெடி கணேசன், அந்த ஆண்டவனே நம்ம தலைவர் ஜீவன் பக்கம்தான் ….
உதவி செய்யாவிட்டாலும், ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் பரவாயில்லை, மக்களுக்கான அரசியல் பணியை தொடர்வதற்கு இடமளியுங்கள். தங்களால் முடியாததை ஒரு இளம் தலைவர் செய்கின்றாரே என சந்தோஷப்படுங்கள், வாழ்த்தி உற்சாகப்படுத்துங்கள், அதை விடுத்து காழ்ப்புணர்ச்சியில் ஒப்பாரி வைக்க வேண்டாம்.” – என்றார்.
மனோ கணேசனும், வேலுகுமாரும் கொக்கரித்து வருகின்றனர் - இ.தொ.கா இளைஞர் அணி தலைவர் ரூபதர்ஷன் பதிலடி. “சொல் அல்ல செயல் என்பதே எமது தலைவரின் அரசியல் ஸ்டைல். மக்களும் இதை பெரிதும் வரவேற்கின்றனர். அதேபோல மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றார்.இதனால் மக்கள் மத்தியில் அவருக்கான ஆதரவு அலை வீசுகின்றது. இதனை சகித்துகொள்ள முடியாமலேயே மனோ கணேசனும், வேலுகுமாரும் கொக்கரித்து வருகின்றனர்.” -என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவர் எஸ்.ரூபதர்ஷன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, “ தங்களால் முடியாது, தாங்கள் வெத்து வேட்டூகள் என்பதை தன்னை தேசிய தலைவராகக் கூறிக்கொள்ளும் மனோ கணேசன் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றார். தனக்கு வாக்களித்த கொழும்பு மாவட்ட மக்களுக்கு சேவை செய்யாமல் அறிக்கைகளை மாத்திரமே விடுத்து வரும் அவரின் அரசியல் எதிர்காலம் ஆட்டம் கண்டுள்ளது. மலையக மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி கிடைத்துவிட்டால், வீடுகள் கிடைத்துவிட்டால் தம்மால் அரசியல் செய்ய முடியாது என்ற அச்சமே, அவர்களை பதற்றமடைய வைத்துள்ளது. அந்த பதற்றத்தாலேயே ஏதேதோ கூற துவங்கியுள்ளனர்.பெரிய கணேசன் சொல்வதைத்தான் சின்ன தலைவர் செய்வாராம், அட போங்க…காமெடி கணேசன், அந்த ஆண்டவனே நம்ம தலைவர் ஜீவன் பக்கம்தான் ….உதவி செய்யாவிட்டாலும், ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் பரவாயில்லை, மக்களுக்கான அரசியல் பணியை தொடர்வதற்கு இடமளியுங்கள். தங்களால் முடியாததை ஒரு இளம் தலைவர் செய்கின்றாரே என சந்தோஷப்படுங்கள், வாழ்த்தி உற்சாகப்படுத்துங்கள், அதை விடுத்து காழ்ப்புணர்ச்சியில் ஒப்பாரி வைக்க வேண்டாம்.” – என்றார்.