• May 07 2026

உலகத் தமிழர் விழாவில் அதிதியாக கலந்துகொள்ளும் மனோ எம்.பி...! இன்று சென்னை பயணம்...!samugammedia

Ziya / Jan 9th 2024, 12:09 pm
image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இம்மாதம் 11, 12 ஆம் திகதிகளில் சென்னையில் உலகத் தமிழர் விழா நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தின் ஏற்பாட்டில்  சென்னையில்   எதிர்வரும் 11 மற்றும் 12ம் திகதிகளில் அயலகத் தமிழர் தினம் கொண்டாடப்படவுள்ளது. 

2 நாள் கருத்தரங்கில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த நிகழ்வில் அயலக தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக, தமிழக அரசின் அழைப்பையேற்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று சென்னைக்குப் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


உலகத் தமிழர் விழாவில் அதிதியாக கலந்துகொள்ளும் மனோ எம்.பி. இன்று சென்னை பயணம்.samugammedia தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இம்மாதம் 11, 12 ஆம் திகதிகளில் சென்னையில் உலகத் தமிழர் விழா நடைபெறவுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தின் ஏற்பாட்டில்  சென்னையில்   எதிர்வரும் 11 மற்றும் 12ம் திகதிகளில் அயலகத் தமிழர் தினம் கொண்டாடப்படவுள்ளது. 2 நாள் கருத்தரங்கில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது.அதேவேளை குறித்த நிகழ்வில் அயலக தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவுள்ளன.இந்த நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக, தமிழக அரசின் அழைப்பையேற்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று சென்னைக்குப் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement