• Nov 19 2024

சஜித்தின் கூட்டணிக்கு ஆதரவு வழங்குங்கள்: தமிழ்க் கட்சிகளுக்கு மனோ அழைப்பு

Chithra / Aug 9th 2024, 8:40 am
image

 

வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி.  அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே மனோ கணேசன் எம்.பி. மேற்படி அழைப்பை விடுத்தார்.

இதன்போது, பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களும், சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்துள்ள இலங்கையர் கூட்டணியாக ஐக்கிய மக்கள் கூட்டணி உள்ளது.

அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுக்கூட கூடிய இடமாக இந்தக் கூட்டணி உள்ளது. அதேபோன்று நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய மற்றும் பொருளாதாரம் தொடர்பில் நிபுணத்துவம் கொண்ட அணியும் எம்மிடமே உள்ளது.

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகள் நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள இந்த மகா கூட்டணியில் இணையுமாறும் அழைப்பு விடுக்கிறேன் என கூறியுள்ளார்.

சஜித்தின் கூட்டணிக்கு ஆதரவு வழங்குங்கள்: தமிழ்க் கட்சிகளுக்கு மனோ அழைப்பு  வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி.  அழைப்பு விடுத்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே மனோ கணேசன் எம்.பி. மேற்படி அழைப்பை விடுத்தார்.இதன்போது, பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களும், சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்துள்ள இலங்கையர் கூட்டணியாக ஐக்கிய மக்கள் கூட்டணி உள்ளது.அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுக்கூட கூடிய இடமாக இந்தக் கூட்டணி உள்ளது. அதேபோன்று நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய மற்றும் பொருளாதாரம் தொடர்பில் நிபுணத்துவம் கொண்ட அணியும் எம்மிடமே உள்ளது.வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகள் நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள இந்த மகா கூட்டணியில் இணையுமாறும் அழைப்பு விடுக்கிறேன் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement