• May 06 2024

தமிழ் மக்களின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் மனோ கனேசன்? samugammedia

Sharmi / Dec 26th 2023, 12:04 pm
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்களின் சார்பில் பொது வேட்பாளராக மனோ கணேசனை களமிறக்குமாறு சிறீரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் சாணக்கியத்துடன் நெளிவு சுழிவுடன் செயற்படக்கூடிய ஒருவரே ஜனாதிபதி பொது வேட்பாளருக்கு பொருத்தமானவர். ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் தரப்பில் பொது வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற கேள்வி சமீபகாலமாக பேசும் பொருளாக இருந்து வருகின்றது. 

ஒரு தரப்பினர் வடமாகாண முன்னாள் முதல்வரான பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனை களமிறக்கலாம் என்றும் கூறியுள்ளனர். அனைத்து தரப்பினரும் விரும்பினால், அதற்கு தான் தயார் என்று, சம்மதமும் தெரிவி்த்துள்ளார். 

விக்கினேஸ்வரன் அவர்கள் நீதியான, நேர்மையான, ஒரு மனிதர் என்பதில் எவருக்கும் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால் அரசியலுக்கு இதுமட்டும் போதாது என்பதும், அதற்கு அப்பால் பல விடயங்களில், நெளிவு சுழிவுடனும், சாணக்கியத்தனத்துடனும் செயற்படவும், தெரிந்திருக்க வேண்டும் என்பது எல்லோரும் அறிந்த விடயம்.

ஆனால் இந்த விடயத்தில் விக்னேஸ்வரனுக்கு, அனுபவம் குறைவு என்பதை, முதலமைச்சராக இருந்த காலத்தில் அவர், பல சந்தர்ப்பங்களில் நிருபித்துள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். 

 எனவே ஜனாதிபதி வேட்பாளராக ஒருவரை தெரிவு செய்யும் போது நாம் மேற்கூறிய விடயங்களையும் கருத்திற் கொண்டு, வடக்கு, கிழக்கு , மலையகம் , தென் இலங்கைதமிழ் பேசும் மக்கள் , மற்றும் ஒ‌ட்டுமொ‌த்த இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, நீண்ட கால அரசியல் அனுபவங்களைக் கொண்ட, மூவின மக்களுடனும் தொடர்புகளைப் பேணிவரும், தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நன்கு உணர்ந்த பொருத்தமான ஒருவரை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தெரிவு செய்ய வேண்டும். 

 அந்த வகையில் தலைநகர் கொழும்பில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனியான முத்திரையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும்  பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் மிகவும் பொருத்தமானவர் என்பது எமது விருப்பமாகும்.

தமிழ் மக்கள் கடந்த காலத்தில் அனுபவித்த சொல்லொணாத் துன்பங்களையும்,வேதனைகளையும் பெரும்பான்மை மக்களிடமும்,தலைவர்களிடமும், வெளிநாட்டு தூதவர்களிடமும் தக்க ஆதாரங்களுடன் எடுத்தரைத்து துணிச்சலுடன் செயற்பட்டு வருபவர். அடிக்கடி தமிழ், சிங்கள ஊடகங்களில் அனைத்து தரப்பு அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களுடன் விவாதங்களில் பங்கு பற்றி காரசாரமாக, தமிழ் பேசும் மக்கள் தரப்பு நியாயங்களை, தர்க்கரீதியாக விவாதித்து ,அவர்களின் சந்தேகங்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதில் வல்லவர்.

அதுமட்டுமல்ல கொழும்பு வாழ் தமிழ் , சிங்கள, இஸ்லாமிய மக்களிடம் நட்புடன் பழகி, அவர்களின் நன் மதிப்பை பெற்றவர். அத்துடன் மலையக மக்களின் அரசியல் உரிமைகளுக்காக, அங்குள்ள தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபட்டு வருபவர். 

மலையக மக்களின் துன்ப துயரங்களை நன்கு உணர்ந்த அவர், தனிப்பட்ட ரீதியாக அவர்களுக்கான , வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டும் வருபவர். வடக்கு, கிழக்கு, மலையகம், தலைநகரம் என எமது மக்கள் பரந்து வாழும் அத்தனை பிரதேசங்களிலும் தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு அரசியல் தலைவராக செயற்பட்டு வரும் மனோ கணேசன் அவர்கள்தான் தமிழ் பேசும் மக்களுக்கான பொது வேட்பாளருக்கான பொருத்தமான தேர்வாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதை நாம் உணர்கின்றோம்.  

எனவே, வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தென் இலங்கையில் செயற்படும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் அனைவரும் ஒன்றிணந்து தமிழ் பேசும் மக்களின் சார்பாக , எமக்கிடையே போட்டியின்றி அன்று தொட்டு இன்றுவரை எமது மக்களுக்காக போராடி, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பெரும்பான்மை இன தென் இலங்கை அரசியல் தலைவர்களுக்கும், வணக்கத்திற்குரிய அனைத்து இன மதத் தலைமைகளுக்கும் தெளிவாக எடுத்துரைக்கும், மனோகணேசன் அவர்களை ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக தெரிவு செய்வதற்கு முன்வருமாறு தமிழ் பேசும் மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் மனோ கனேசன் samugammedia எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்களின் சார்பில் பொது வேட்பாளராக மனோ கணேசனை களமிறக்குமாறு சிறீரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,அரசியல் சாணக்கியத்துடன் நெளிவு சுழிவுடன் செயற்படக்கூடிய ஒருவரே ஜனாதிபதி பொது வேட்பாளருக்கு பொருத்தமானவர். ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் தரப்பில் பொது வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற கேள்வி சமீபகாலமாக பேசும் பொருளாக இருந்து வருகின்றது. ஒரு தரப்பினர் வடமாகாண முன்னாள் முதல்வரான பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனை களமிறக்கலாம் என்றும் கூறியுள்ளனர். அனைத்து தரப்பினரும் விரும்பினால், அதற்கு தான் தயார் என்று, சம்மதமும் தெரிவி்த்துள்ளார். விக்கினேஸ்வரன் அவர்கள் நீதியான, நேர்மையான, ஒரு மனிதர் என்பதில் எவருக்கும் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால் அரசியலுக்கு இதுமட்டும் போதாது என்பதும், அதற்கு அப்பால் பல விடயங்களில், நெளிவு சுழிவுடனும், சாணக்கியத்தனத்துடனும் செயற்படவும், தெரிந்திருக்க வேண்டும் என்பது எல்லோரும் அறிந்த விடயம். ஆனால் இந்த விடயத்தில் விக்னேஸ்வரனுக்கு, அனுபவம் குறைவு என்பதை, முதலமைச்சராக இருந்த காலத்தில் அவர், பல சந்தர்ப்பங்களில் நிருபித்துள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  எனவே ஜனாதிபதி வேட்பாளராக ஒருவரை தெரிவு செய்யும் போது நாம் மேற்கூறிய விடயங்களையும் கருத்திற் கொண்டு, வடக்கு, கிழக்கு , மலையகம் , தென் இலங்கைதமிழ் பேசும் மக்கள் , மற்றும் ஒ‌ட்டுமொ‌த்த இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, நீண்ட கால அரசியல் அனுபவங்களைக் கொண்ட, மூவின மக்களுடனும் தொடர்புகளைப் பேணிவரும், தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நன்கு உணர்ந்த பொருத்தமான ஒருவரை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தெரிவு செய்ய வேண்டும்.  அந்த வகையில் தலைநகர் கொழும்பில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனியான முத்திரையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும்  பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் மிகவும் பொருத்தமானவர் என்பது எமது விருப்பமாகும். தமிழ் மக்கள் கடந்த காலத்தில் அனுபவித்த சொல்லொணாத் துன்பங்களையும்,வேதனைகளையும் பெரும்பான்மை மக்களிடமும்,தலைவர்களிடமும், வெளிநாட்டு தூதவர்களிடமும் தக்க ஆதாரங்களுடன் எடுத்தரைத்து துணிச்சலுடன் செயற்பட்டு வருபவர். அடிக்கடி தமிழ், சிங்கள ஊடகங்களில் அனைத்து தரப்பு அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களுடன் விவாதங்களில் பங்கு பற்றி காரசாரமாக, தமிழ் பேசும் மக்கள் தரப்பு நியாயங்களை, தர்க்கரீதியாக விவாதித்து ,அவர்களின் சந்தேகங்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதில் வல்லவர். அதுமட்டுமல்ல கொழும்பு வாழ் தமிழ் , சிங்கள, இஸ்லாமிய மக்களிடம் நட்புடன் பழகி, அவர்களின் நன் மதிப்பை பெற்றவர். அத்துடன் மலையக மக்களின் அரசியல் உரிமைகளுக்காக, அங்குள்ள தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபட்டு வருபவர். மலையக மக்களின் துன்ப துயரங்களை நன்கு உணர்ந்த அவர், தனிப்பட்ட ரீதியாக அவர்களுக்கான , வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டும் வருபவர். வடக்கு, கிழக்கு, மலையகம், தலைநகரம் என எமது மக்கள் பரந்து வாழும் அத்தனை பிரதேசங்களிலும் தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு அரசியல் தலைவராக செயற்பட்டு வரும் மனோ கணேசன் அவர்கள்தான் தமிழ் பேசும் மக்களுக்கான பொது வேட்பாளருக்கான பொருத்தமான தேர்வாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதை நாம் உணர்கின்றோம்.  எனவே, வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தென் இலங்கையில் செயற்படும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் அனைவரும் ஒன்றிணந்து தமிழ் பேசும் மக்களின் சார்பாக , எமக்கிடையே போட்டியின்றி அன்று தொட்டு இன்றுவரை எமது மக்களுக்காக போராடி, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பெரும்பான்மை இன தென் இலங்கை அரசியல் தலைவர்களுக்கும், வணக்கத்திற்குரிய அனைத்து இன மதத் தலைமைகளுக்கும் தெளிவாக எடுத்துரைக்கும், மனோகணேசன் அவர்களை ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக தெரிவு செய்வதற்கு முன்வருமாறு தமிழ் பேசும் மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement