• Nov 23 2024

குவைத் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த மனுஷ நாணயக்கார..!samugammedia

mathuri / Feb 27th 2024, 8:57 pm
image

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை ஒன்றிணைத்து பயன்களைப்பெற குவைத் முதலீட்டாளர்களுக்கு விசேட அழைப்பொன்றை விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தில் நேற்று (26) நடைபெற்ற குவைத்தின் தேசிய தின நிகழ்வின் போதே அமைச்சர் இந்த விசேட அழைப்பை விடுத்தார்.

குவைத்தில் பணிபுரியும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு குவைத் இரண்டாவது தாயகமாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,  இலங்கை மற்றும் குவைத் அரசாங்கத்திற்கிடையில் 2009 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பரஸ்பர பாதுகாப்பு உடன்படிக்கையானது பல வசதிகளை வழங்குகிறது , இதனால் குவைத் நாட்டின் முதலீட்டாளர்கள் அதிகபட்ச பலனைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குவைத்தில் பணிபுரியும்  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு குவைத் இரண்டாவது தாயகமாகவுள்ளது. இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி அவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள குவைத் அரசாங்கத்திற்கு இதன் போது அவர் நன்றியையும் தெரிவித்துள்ளார். 

குவைத் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த மனுஷ நாணயக்கார.samugammedia தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை ஒன்றிணைத்து பயன்களைப்பெற குவைத் முதலீட்டாளர்களுக்கு விசேட அழைப்பொன்றை விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தில் நேற்று (26) நடைபெற்ற குவைத்தின் தேசிய தின நிகழ்வின் போதே அமைச்சர் இந்த விசேட அழைப்பை விடுத்தார்.குவைத்தில் பணிபுரியும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு குவைத் இரண்டாவது தாயகமாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும்,  இலங்கை மற்றும் குவைத் அரசாங்கத்திற்கிடையில் 2009 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பரஸ்பர பாதுகாப்பு உடன்படிக்கையானது பல வசதிகளை வழங்குகிறது , இதனால் குவைத் நாட்டின் முதலீட்டாளர்கள் அதிகபட்ச பலனைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.குவைத்தில் பணிபுரியும்  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு குவைத் இரண்டாவது தாயகமாகவுள்ளது. இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி அவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள குவைத் அரசாங்கத்திற்கு இதன் போது அவர் நன்றியையும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement