நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (13) பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களில் இன்றும் அதிக மழை வீழ்ச்சி. samugammedia நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (13) பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.