சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பலர் திசைகாட்டி சின்னத்திலே தற்போது தேர்தலில் களமிறங்கி இருக்கிறார்கள் என இங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமற் உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்ளப்பு மாவட்டம் காக்காச்சுவட்டைக் கிராமத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்
மேலும் தெரிவிக்கையில் ... ..
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இங்கு வந்து எமது மக்களின் பிரச்சினைகளைப் பார்க்கப்போவது அல்ல. எமது மக்களுடைய பிரச்சனைகள் எமக்குத்தான் தெரியும்.
யானையினால் ஒருவர் பாதிக்கப்பட்டால் உடனே அந்த இடத்தின் நிற்பவர்கள் நாங்கள் தான் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படகு சின்னத்திலே போட்டியிடுகின்றவர்கள் அவர்களுடைய கட்சியின் தலைவருடைய புகைப்படத்தை பிரசுரிக்காமல் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். எவராவது தமது கட்சியின் தலைவரின் புகைப்படத்தை பிரசுரிக்காமல் பிரசுரங்களை விநியோகிப்பார்களா? அவர்களுக்கே புரிந்து விட்டது அவர்களுடைய கட்சித் தலைவரின் படத்தை இட்டு பிரசுரங்களை விநியோகித்தால் அவர்களுக்குக் கிடைக்கும் வாக்கும் இல்லாமல் போய்விடும் என்றும் தெரிவித்தார்இதன்போதுஉள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்,
பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பலர் திசைகாட்டி சின்னத்தில் களமிறக்கம் - சாணக்கியன் எம்.பி பகிரங்கம் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பலர் திசைகாட்டி சின்னத்திலே தற்போது தேர்தலில் களமிறங்கி இருக்கிறார்கள் என இங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமற் உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.மட்டக்ளப்பு மாவட்டம் காக்காச்சுவட்டைக் கிராமத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்மேலும் தெரிவிக்கையில் . .ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இங்கு வந்து எமது மக்களின் பிரச்சினைகளைப் பார்க்கப்போவது அல்ல. எமது மக்களுடைய பிரச்சனைகள் எமக்குத்தான் தெரியும்.யானையினால் ஒருவர் பாதிக்கப்பட்டால் உடனே அந்த இடத்தின் நிற்பவர்கள் நாங்கள் தான் எனத் தெரிவித்துள்ளார். மேலும் படகு சின்னத்திலே போட்டியிடுகின்றவர்கள் அவர்களுடைய கட்சியின் தலைவருடைய புகைப்படத்தை பிரசுரிக்காமல் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். எவராவது தமது கட்சியின் தலைவரின் புகைப்படத்தை பிரசுரிக்காமல் பிரசுரங்களை விநியோகிப்பார்களா அவர்களுக்கே புரிந்து விட்டது அவர்களுடைய கட்சித் தலைவரின் படத்தை இட்டு பிரசுரங்களை விநியோகித்தால் அவர்களுக்குக் கிடைக்கும் வாக்கும் இல்லாமல் போய்விடும் என்றும் தெரிவித்தார்இதன்போதுஉள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.