• Sep 20 2024

மறவன்புலவு சச்சிதானந்தனின் 14 வருட கனவு நனவாகிறது...!சிவசேனை தொண்டர் புகழாரம்...!samugammedia

Sharmi / Oct 9th 2023, 4:46 pm
image

Advertisement

காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை நாளை ஆரம்பிக்கின்ற நிலையில் இலங்கை சிவசேனை தலைவர் மறவன்பலவு சச்சிதானந்தன் ஐயாவின் கனவு நனவாகிறது என சிவசேனை தொண்டர் சிறீந்திரன் தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கும் காங்கேசன்துறைம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்க வேண்டும் என மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா முயற்சிகளை ஆரம்பித்தார்.

அப்போதைய வடமாகாண ஆளுநர் மறைந்த ரெஜினோல் குரே மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயாவின் கோரிக்கையை அரசாங்கத்திற்கு எடுத்துச் சென்று அனுமதியை பெற்றுக் கொடுத்தார்.

இந்தியத் தரப்பில் இந்து மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் இந்து மக்கள் போராளிகள் கட்சியின் தலைவர் அருண் உபாத்தியாயர் தமது ஆதரவுகளை வழங்கினார்.

அது மட்டுமல்லாது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் குறித்த கப்பல் சேவையை செயற்படுத்துவதற்காக தன்னாலான பங்கை வழங்கியிருந்தார்.

ஆகவே குறித்த கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்காக தமது பொறுப்புக்களை சரிவர ஆற்றிய அனைவருக்கும் சிவசேனை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மறவன்புலவு சச்சிதானந்தனின் 14 வருட கனவு நனவாகிறது.சிவசேனை தொண்டர் புகழாரம்.samugammedia காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை நாளை ஆரம்பிக்கின்ற நிலையில் இலங்கை சிவசேனை தலைவர் மறவன்பலவு சச்சிதானந்தன் ஐயாவின் கனவு நனவாகிறது என சிவசேனை தொண்டர் சிறீந்திரன் தெரிவித்தார்.யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கும் காங்கேசன்துறைம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்க வேண்டும் என மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா முயற்சிகளை ஆரம்பித்தார்.அப்போதைய வடமாகாண ஆளுநர் மறைந்த ரெஜினோல் குரே மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயாவின் கோரிக்கையை அரசாங்கத்திற்கு எடுத்துச் சென்று அனுமதியை பெற்றுக் கொடுத்தார்.இந்தியத் தரப்பில் இந்து மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் இந்து மக்கள் போராளிகள் கட்சியின் தலைவர் அருண் உபாத்தியாயர் தமது ஆதரவுகளை வழங்கினார்.அது மட்டுமல்லாது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் குறித்த கப்பல் சேவையை செயற்படுத்துவதற்காக தன்னாலான பங்கை வழங்கியிருந்தார்.ஆகவே குறித்த கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்காக தமது பொறுப்புக்களை சரிவர ஆற்றிய அனைவருக்கும் சிவசேனை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement