• Jun 03 2026

செம்மணியில் 262 என்புகள் அடையாளம்; கழுத்துப் பகுதியில் சிக்கிய நாணயக்குற்றி வடிவப் பொருள்

Chithra / Jun 2nd 2026, 7:23 am
image

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று அடையாளம் காணப்பட்ட என்புத்தொகுதியின் கழுத்துப் பகுதியிலிருந்து நாணயக்குற்றி வடிவிலான பொருள் ஒன்று கண்டறியப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 


இதனுடன், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத்தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 262ஆக அதிகரித்துள்ளது.


செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 13ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றன.


இது தொடர்பில் செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

  

இதன்போது, புதிதாக என்புத்தொகுதியொன்று அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டது. மேலதிகமாக மேலும் மூன்று மனித என்புத்தொகுதிகள் தென்பட்ட போதிலும், அவை இன்னும் சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்படவில்லை.


அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புத்தொகுதியின் கழுத்துப் பகுதியிலிருந்து கண்டறியப்பட்ட நாணயக்குற்றி வடிவிலான பொருளானது 97ஆவது சான்றுப் பொருளாக இலக்கமிடப்பட்டு, நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.


மேலும், குறித்த என்புத்தொகுதியின் தலைப்பகுதியில் முழுமையான தேங்காய் சிரட்டை ஒன்றும் அடையாளம் காணப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழியானது மயான எல்லைக்குள் அமைந்திருப்பதால், அது ஏதேனும் தென்னங்கன்றுகளின் அடிப்பகுதியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.


இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்தும் மொத்தமாக 263 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 262 என்புத்தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


இதேவேளை, ருகுணு பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறையைச் சேர்ந்த பத்து மாணவர்கள், நேற்று முதல் இந்த அகழ்வுப் பணிகளில் இணைந்து கொண்டுள்ளனர்.



இதேவேளை செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட சித்துப்பாத்தி இந்து மயான எரிதகன மேடையின் அத்திவாரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.


"தற்போது நிலவும் மழையுடனான காலநிலையின் காரணமாக, குறித்த பகுதி சதுப்பு நிலம் என்பதால் அத்திவாரத்துக்கான பிடிமானம் இல்லாத நிலையிலேயே அது இடிந்து வீழ்ந்துள்ளது.


மூன்றாம் கட்ட அகழ்வின் முதலாம் கட்டப் பணிகளின்போது, இந்த அத்திவாரத்துக்குக் கீழாக என்புத்தொகுதியொன்று முன்னர் அடையாளம் காணப்பட்டிருந்தது. எனினும், குறித்த என்புத்தொகுதி முன்னரே பாதுகாப்பான முறையில் மணலிடப்பட்டு மூடப்பட்டுள்ளது.


எனவே, மீண்டும் அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது அது தொடர்பான மேலதிக விவரங்கள் வெளியிடப்படும்." - என்றார்.

செம்மணியில் 262 என்புகள் அடையாளம்; கழுத்துப் பகுதியில் சிக்கிய நாணயக்குற்றி வடிவப் பொருள் யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று அடையாளம் காணப்பட்ட என்புத்தொகுதியின் கழுத்துப் பகுதியிலிருந்து நாணயக்குற்றி வடிவிலான பொருள் ஒன்று கண்டறியப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத்தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 262ஆக அதிகரித்துள்ளது.செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 13ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றன.இது தொடர்பில் செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,  இதன்போது, புதிதாக என்புத்தொகுதியொன்று அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டது. மேலதிகமாக மேலும் மூன்று மனித என்புத்தொகுதிகள் தென்பட்ட போதிலும், அவை இன்னும் சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்படவில்லை.அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புத்தொகுதியின் கழுத்துப் பகுதியிலிருந்து கண்டறியப்பட்ட நாணயக்குற்றி வடிவிலான பொருளானது 97ஆவது சான்றுப் பொருளாக இலக்கமிடப்பட்டு, நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.மேலும், குறித்த என்புத்தொகுதியின் தலைப்பகுதியில் முழுமையான தேங்காய் சிரட்டை ஒன்றும் அடையாளம் காணப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழியானது மயான எல்லைக்குள் அமைந்திருப்பதால், அது ஏதேனும் தென்னங்கன்றுகளின் அடிப்பகுதியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்தும் மொத்தமாக 263 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 262 என்புத்தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.இதேவேளை, ருகுணு பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறையைச் சேர்ந்த பத்து மாணவர்கள், நேற்று முதல் இந்த அகழ்வுப் பணிகளில் இணைந்து கொண்டுள்ளனர்.இதேவேளை செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட சித்துப்பாத்தி இந்து மயான எரிதகன மேடையின் அத்திவாரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது."தற்போது நிலவும் மழையுடனான காலநிலையின் காரணமாக, குறித்த பகுதி சதுப்பு நிலம் என்பதால் அத்திவாரத்துக்கான பிடிமானம் இல்லாத நிலையிலேயே அது இடிந்து வீழ்ந்துள்ளது.மூன்றாம் கட்ட அகழ்வின் முதலாம் கட்டப் பணிகளின்போது, இந்த அத்திவாரத்துக்குக் கீழாக என்புத்தொகுதியொன்று முன்னர் அடையாளம் காணப்பட்டிருந்தது. எனினும், குறித்த என்புத்தொகுதி முன்னரே பாதுகாப்பான முறையில் மணலிடப்பட்டு மூடப்பட்டுள்ளது.எனவே, மீண்டும் அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது அது தொடர்பான மேலதிக விவரங்கள் வெளியிடப்படும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement