மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் குறித்த பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தும் பணிகள் நேற்று இடம்பெற்றதாகவும் பதுளை மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
பதுளையில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளில், சுமார் 14 பிரிவுகள் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னர் பாதிக்கப்படாமல் இருந்த ரிதீமாலியத்த பிரிவும் இப்போது பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டார்.
பதுளையில் பேரழிவு - மண்சரிவு அபாயத்தால் 238 குடும்பங்கள் வெளியேற்றம் மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் குறித்த பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்.பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தும் பணிகள் நேற்று இடம்பெற்றதாகவும் பதுளை மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.பதுளையில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளில், சுமார் 14 பிரிவுகள் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.முன்னர் பாதிக்கப்படாமல் இருந்த ரிதீமாலியத்த பிரிவும் இப்போது பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டார்.