• Apr 14 2026

மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய வெடிப்பு; தாழிறங்கும் அபாயம்

Chithra / Apr 14th 2026, 6:50 pm
image

நுவரெலியா - மஸ்கெலியா நகரின் பிரதான வீதியில் இருந்து பிரிந்து செல்லும் ஆலய வீதியில் பாரியளவில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக அவ் வீதியில் இருந்த சிறிதளவு வெடிப்பு தற்போது பெரியதாகியுள்ளது.


இது குறித்து சம்பந்தப்பட்ட நுவரெலியா மாவட்ட புவி ஆய்வாளர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் மஸ்கெலியா நகரில் பாரிய அளவில் நிலம் தாழிறக்கம் ஏற்படும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். 


இதுதொடர்பில் மஸ்கெலியா பிரதேச சபை, மஸ்கெலியா பொலிஸார், நோர்வூட் பிரதேச செயலாளர் மற்றும் நுவரெலியா மாவட்ட அரச அதிபர் துஷாரி தென்னகோன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 


தாழிறக்கம் ஏற்பட்டால் பாரியளவிலான உயிர், உடமைகள் சேதம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்ப்டுகின்றது. 


மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய வெடிப்பு; தாழிறங்கும் அபாயம் நுவரெலியா - மஸ்கெலியா நகரின் பிரதான வீதியில் இருந்து பிரிந்து செல்லும் ஆலய வீதியில் பாரியளவில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக அவ் வீதியில் இருந்த சிறிதளவு வெடிப்பு தற்போது பெரியதாகியுள்ளது.இது குறித்து சம்பந்தப்பட்ட நுவரெலியா மாவட்ட புவி ஆய்வாளர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் மஸ்கெலியா நகரில் பாரிய அளவில் நிலம் தாழிறக்கம் ஏற்படும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பில் மஸ்கெலியா பிரதேச சபை, மஸ்கெலியா பொலிஸார், நோர்வூட் பிரதேச செயலாளர் மற்றும் நுவரெலியா மாவட்ட அரச அதிபர் துஷாரி தென்னகோன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். தாழிறக்கம் ஏற்பட்டால் பாரியளவிலான உயிர், உடமைகள் சேதம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்ப்டுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement